“அப்படிபோடு.. செலக்டர்ஸ் சிக்கிட்டாங்க.. சாம்சன் இப்ப இதுலதான் கவனம் செலுத்தனும்!” – கம்பீர் உற்சாக பாராட்டு!

0
1089
Gambhir

இந்திய அணி நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக அந்த நாட்டில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது முறையாக கேஎல் ராகுல் தலைமையில் நேற்று கைப்பற்றியது.

- Advertisement -

கேப்டன் கேஎல்.ராகுலுக்கு இந்த சிறப்பு மிகுந்த வெற்றி கிடைப்பதற்கு மிக முக்கிய காரணமாக மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் அமைந்திருந்தது. எட்டு வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன், நேற்று தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை அடித்து அசத்தார்.

சஞ்சு சாம்சன் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் மூன்று இடங்களில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறார். ஆனால் இந்திய அணியில் அந்த இடத்தை தருவதற்கு சரியான சூழலை இல்லை. நிறைய வீரர்கள் முதல் மூன்று இடங்களில் விளையாடியவர்களாக, ரன்கள் எடுத்தவர்களாக இருந்தது அவரது வாய்ப்பை தட்டிப் படித்தது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் நான்காவது இடத்திற்கு கீழே வந்து சொற்ப ரன்களில் வெளியேறினார். நேற்று அவரை அதிரடியாக கேப்டன் கே.எல்.ராகுல் மூன்றாவது இடத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கான பலனையும் அவருக்கு சஞ்சு சாம்சன் திருப்பி கொடுத்தார்.

- Advertisement -

பேட்டிங் செய்வதற்கு கடினமான மிகவும் மெதுவான ஆடுகளத்தில், அதே சமயத்தில் கொஞ்சம் பவுன்சரும் இருந்த நிலையில், தன்னுடைய அட்டகாசமான புல் ஷாட் திறமையின் மூலமாக, ஸ்ட்ரைக்ரேட் மற்றும் ரன் ரேட் குறையாமல் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தென்னாப்பிரிக்கா மண்ணில் அடித்த சதம் என்கின்ற காரணத்தினால், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த சதம் மாற்றத்தை உருவாக்கலாம்.

இதுகுறித்து பேசி உள்ள கவுதம் கம்பீர் கூறும் பொழுது “அவருக்கு அபாரமான திறமை இருக்கிறது என்பதை ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் விதத்தில் இருந்தே நாம் தெரிந்து கொண்டோம். இன்றைய சதம் அவருடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நல்ல முறையில் எடுத்துச் செல்ல உதவும்.

இப்படி சதம் அடிப்பது செலக்டர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கக்கூடியது. இனி விஷயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!