292 ரன்.. மந்தனா-செபாலி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.. கடைசி 4ல் மூன்று சதம்

0
1328
Smriti

தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளையும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக் கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். கேப்டனின் முடிவை நியாயமாக்கும் விதமாக துவக்க வீராங்கனை செபாலி வருமா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் சேர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதங்கள் கடந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போன்றது. இது தொடர்ந்து விளையாடிய இருவரும் சதம் அடித்தார்கள். பார்ட்னர்ஷிப் 200 ரன்கள் தாண்டியது. இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 149 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 90 வருட பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச துவக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப் இதுதான். இந்த வகையில் இந்த ஜோடி புதிய உலக சாதனையை பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்திருக்கிறத. செபாலி வர்மா ஆட்டம் இழக்காமல் 152 பந்தில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா உ.கோ ஜெயிக்காதப்ப வேதனைப்பட்டேன்.. இந்த ஒரு மனுஷனுக்காக இந்தியா ஜெயிக்கணும் – சோயப் அக்தர் பேட்டி

மேலும் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் இரண்டு சதங்கள் ஸ்மிருதி மந்தனா அடித்திருந்தார். தொடர்ச்சியான மூன்றாவது சதத்தை 90 ரன்கள் எடுத்து தவறவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது துவங்கிய டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருக்கிறார். அவருடைய கடைசி நான்கு சர்வதேச இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அவரிடம் இருந்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!