இவர் எங்களுக்கு அண்ணன் மாதிரி.. இவங்க 2 பேர் பத்தி பேசணும்னா பல மணி நேரம் ஆகும்- சூரியகுமார் பேட்டி

0
594

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று நிகழ்வைப் படைத்துள்ளது.

உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர், அணி வீரர் சூரியகுமார் யாதவ் இரண்டு இந்திய வீரர்கள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சிறப்பாக தொடரை முடித்து இருக்கிறது இந்திய அணி. ஒரு சில போட்டிகளில் தோல்விக்கு அருகே வந்தாலும், அதையும் தனது பந்துவீச்சு திறமையின் மூலம் வெற்றிகரமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டியே ஆக வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் பந்து வீச்சை மாற்றுவதும், ஒரு அணியை தலைவனாக வழி நடத்துவதும், பேட்டிங்கில் முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைப்பதும் என்று மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

மேலும் அணியின் மற்றொரு வீரரான விராட் கோலி தொடரின் ஆரம்பம் முதல் அரை இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், முக்கியமான இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்து வெளியேற, பொறுப்பை தான் கையில் எடுத்துக் கொண்டு 76 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து இந்திய அணி வீரர் சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது ” உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் யாருடைய முகத்திலும் பெரிய மகிழ்ச்சியை நான் பார்க்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இந்த தொடர் வெற்றிகரமாக முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். டி20 தொடரில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு இன்னும் இரண்டு வடிவ கிரிக்கெட் தொடர் இருக்கிறது. அவர்கள் டி20 உலக கோப்பையை விட அதிகமாக சாதித்து இருக்கிறார்கள். ரோஹித் சர்மாவின் தரத்தை குறிப்பிடுவது கடினம்.

- Advertisement -

நான் அவருடன் பிரான்சிஸ் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறேன். அவர் களத்திற்கு வெளியேயும், மைதானத்திலும் ஒவ்வொரு வீரரையும் கவனித்துக் கொள்ளும் விதம் அவரது தரத்தை எடுத்துரைக்கிறது. ரோஹித் மற்றும் விராட் கோலியை பற்றி விவரிக்க நிச்சயமாக பல மணி நேரம் ஆகும். ரோஹித் சர்மா சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு அண்ணனாக இருக்கிறார்.

இதையும் படிங்க:தோனி எங்களுக்கு நிறைய பண்ணிருக்கார்.. அப்படி பண்ணது ரொம்ப சந்தோஷம்.. ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

விராட் கோலியை பற்றி கூற வேண்டும் என்றால் கடவுளே அவரிடம் நம்ப முடியாத அளவு அனுபவமும், ஆற்றலும் இருக்கிறது. இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன் வரை அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை. இருப்பினும் அவர் களத்தில் இருந்தால் அவர் ஃபீல்டிங் செய்யும் விதம், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வது, எப்படி முன்னேறி செல்கிறார் என்பது போன்றவற்றை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற இரண்டு வடிவ கிரிக்கெட் தொடருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” கூறி இருக்கிறார்.