மேட்ச் முடிய 3 பந்துதான் இருக்கு.. ஆனால் டிராவிட் செய்த வேலையை பார்த்திங்களா – அஸ்வின் உருக்கமான பேச்சு

0
14629
Ashwin

நேற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி t20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது. இந்த போட்டி உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். அவர் குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாரளான ராகுல் டிராவிட் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதற்காக இருந்தார். ஆனால் அவருடன் சிறிது பேச்சு வார்த்தை நடத்தி மேலும் ஆறு மாதங்கள் தொடரச் செய்தார்கள். இதற்கு நல்ல முடிவாக டி20 உலகக்கோப்பையை அவருடைய பயிற்சியின் கீழ் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

தொடர்ச்சியாக 25 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் இயங்கி வரும் ராகுல் டிராவிட் விளையாடிய காலகட்டத்தில் உலகக் கோப்பை தொடரை எதையும் இந்திய அணி வெல்லவில்லை. இந்த நிலையில் பயிற்சியாளராக அவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இருந்ததன் மூலமாக அந்தக் குறையும் தீர்ந்திருக்கிறது.

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ராகுல் டிராவிட் அணிக்குள் எப்படியான மாற்றங்களை கொண்டு வந்தார் என்பது குறித்து அப்படியே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. நேராக விமானத்தில் இருந்து இறங்கினால் போட்டிக்கு திட்டத்தை வகுப்பதற்காக சென்று விடுவார். ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று எவ்வளவு வீசுகிறது என்பது வரை அவர் பார்ப்பார்.

இவ்வளவு விஷயங்களை ஏன் பாய் சேர்த்து வைக்கிறீர்கள் என்று கேட்டால், இதிலிருந்து ஏதாவது ஒரு 10% அணியின் வெற்றிக்கு உதவினால் போதும் என்பார். அதற்காக அவர் செலவிடும் நேரம் மிகவும் அதிகம். பல நேரங்களில் அவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஜெர்சியை கூட மாற்ற மாட்டார். பயிற்சியில் இருந்து வந்து அப்படியே இந்த வேலைகளை கவனிப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி எங்களுக்கு நிறைய பண்ணிருக்கார்.. அப்படி பண்ணது ரொம்ப சந்தோஷம்.. ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

நேற்று போட்டி முடிய 3 பந்துகள் மட்டுமே இருக்கிறது. அவருடைய அணி உலக கோப்பையை கிட்டத்தட்ட வெல்லும் இடத்திற்கு வந்திருக்கிறது. ஆனாலும் கூட அப்பொழுதும் பயிற்சியாளராக அவர் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு பெரிய கோப்பையை வெல்லும் பொழுது கூட தன்னுடைய வேலையை விடவில்லை. அது எப்பொழுது வேண்டுமானாலும் அவர் செய்யலாம், ஆனாலும் அவர் அவருடைய வேலையில் எப்பொழுதும் கவனமாக இருப்பார்” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தார்.