“ஸ்மித் அவுட்டா இல்லையா? டெக்னாலஜி ப்ராப்ளமா?..!” – உண்மையை உடைத்து பேசிய ரபாடா!

0
883
Rabada

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் முக்கியமான அணியாக ஆஸ்திரேலிய அணி கணிக்கப்பட்டது!

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு பின்னடைவாக வீரர்களின் காயம் அமைந்தது. இதன் காரணமாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடினார்கள்.

- Advertisement -

இப்படி இருந்தும் கூட அவர்கள் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மொத்தமாக வென்றார்கள். ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு மூன்று என தோற்றார்கள். அங்கேயே அவர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சில பிரச்சனைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் பெரிய வீரர்கள் அணிக்குள் வரும் பொழுது மாறும் என்று நம்பப்பட்டது.

இந்த நிலையில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அணிக்குள் வந்த பொழுதும் கூட, இந்திய சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணுகுமுறை சரியாக அமையவில்லை. முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 199 ரன்களுக்கு சுருண்டு தோற்றவர்கள், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 177 ரன்களுக்கு சுருண்டு தோற்றார்கள்.

மேலும் நேற்றைய போட்டியில் ஸ்மித் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவருக்கும் வழங்கப்பட்ட மூன்றாவது நடுவரது தீர்ப்பு சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது. ரபாடா பந்துவீச்சில் ஸ்மித்துக்கு பந்து ஸ்டெம்பில் படுவதற்கான வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவரிடம் சென்ற பொழுது துல்லியமாக பந்து ஸ்டெம்பில் சரியாக பட்டது.

- Advertisement -

இதுகுறித்து இன்று பேசி உள்ள ரபாடா கூறும்பொழுது ” மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்காக காத்திருந்தேன். பந்து கொஞ்சம் ஸ்கிட் ஆனது போல உணர்ந்தேன். பந்து உண்மையில் அதிகம் பவுன்ஸ் ஆகவில்லை.

அதே சமயத்தில் ஸ்மித் ஸ்டெம்புகளுக்கு குறுக்கே நடந்து விளையாடுவார். இதுதான் அவருடைய ட்ரிகர் பாயிண்ட். அந்தக் கோணத்திலிருந்து நானும் குயினியும் பார்க்கும் பொழுது, அது அவுட் என்று எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

இதன் காரணமாகவே நாங்கள் அப்பீல் செய்தோம். இன்று எங்களுக்கு தொழில் நுட்பம் சாதகமாக அமைந்துவிட்டது. நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். பந்து விலகிச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. நினைத்தபடியே நடந்தது.

ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய வீரர். அவர் நிலைத்து நின்றால் ரன்கள் எடுப்பார் என்று நமக்குத் தெரியும். எனவே நிச்சயமாக அவர் ஒரு பெரிய விக்கெட்தான். எனவே அவரை முன்கூட்டியே வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!