SMAT 2023.. 200 ஸ்ட்ரைக் ரேட்.. பவுண்டரிகளில் 80 ரன்.. ருதுராஜ் அதிரடி சதம்.. மகாராஷ்டிரா அபார வெற்றி!

0
539
Ruturaj

இந்தியாவில் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் அதேவேளையில், இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரும் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று டி பிரிவில் விதர்பா அணியும் மகாராஷ்டிரா அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

விதர்பா அணிக்கு அதர்வா டைடே கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். அதேபோல் ருதுராஜ் விளையாடும் மகாராஷ்டிரா அணிக்கு கேதார் ஜாதவ் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.

முதலில் விளையாடிய விதர்பா அணிக்கு கேப்டன் அதர்வா டைடே 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கம் தந்தார். அவருடன் சேர்ந்து துவக்க வீரராக வந்த துருவ் சோரி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

இவர்கள் இருவரை தவிர அந்த அணிக்கு மற்ற யாரும் பெரிதாக ரன்கள் கொண்டு வரவில்லை. சுபம் துபே மட்டுமே 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் விதர்பா பணி 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. மகாராஷ்டிரா தரப்பில் பந்துவீச்சில் சத்தியஜித் நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு ருதுராஜ் துவக்க வீரராக வழக்கம் போல் வந்தார். இவருடன் சேர்ந்து கேப்டன் கேதார் ஜாதவும் துவக்க வீரராக வந்தார்.

அனுபவம் வாய்ந்த இந்த இரண்டு வீரர்களும் அதிரடியில் மிரட்டினார்கள். கேதார் ஜாதவ் 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த அஸம் காஸி முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.

ஆனால் இன்னொரு முனையில் விளையாடிய ருதுராஜ் அதிரடியை நிறுத்தவே இல்லை. அவர் இறுதி வரை களத்தில் நின்று 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 200 ஸ்டிரைக் ரேட்டில் 102 ரன்கள் குவித்து அணியை வெல்ல வைத்தார். இதில் பவுண்டரிகளில் மட்டும் 80 ரன்கள் குவித்து இருக்கிறார். இவருடன் இணைந்து விளையாடிய சித்தார்த் 28 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆண்டு முழுக்க ருதுராஜ் பேட்டிங் மிகவும் முதிர்ச்சியாக மாறியதோடு அதிரடியும் குறையாமல் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கிறது. தற்போது இவர் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வந்தது குறிப்பிடத்தக்கது!