பென் ஸ்டோக்ஸ் விசயத்தில் ஸ்மார்ட் மூவ்.. செம ஸ்ட்ராங் ஆகும் சிஎஸ்கே.. தோனிக்கு கடைசி கப் உறுதி!

0
20945
Dhoni

இந்தியாவில் தற்பொழுது 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்து இருக்கிறது. இதற்கு அடுத்து பெரிய தொடராக அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது.

இதற்கு நடுவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் நடக்கிறது. தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகத்தின் மிகப்பெரிய வெற்றிகளை ஐபிஎல் பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரே கடைசியாக இருக்கும் என்பது உறுதி.

எனவே அவரை சிறப்பான முறையில் வழி அனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எல்லா வகையிலும் முயற்சி செய்யும். தற்பொழுது அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நடக்க இருக்கும் மினி ஏலத்தை சிஎஸ்கே நிர்வாகம் அணுக இருக்கிறது.

கடந்த ஆண்டு 16.25 கோடிக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்சை சிஎஸ்கே வாங்கியது. காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் பந்து வீசவில்லை. மேலும் அவர் விளையாடும் அணிக்கு பெரிதாக தேவைப்படவும் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் அவரை இந்த வருடம் கழட்டி விட சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்தது. ஆனால் அது நாகரீகமான முறையை பின்பற்றி, பென் ஸ்டோக்ஸ் தாமாகவே அடுத்த வருடம் பணி சுமையின் காரணமாக விளையாட முடியாமல் வெளியே செல்கிறார் என்று அறிவித்திருக்கிறது.

மேற்கொண்டு அம்பதி ராயுடு இல்லாதது, கைல் ஜேமிஷனை கழட்டி விடுவது, மேலும் கூடுதலாக வழங்கப்படும் ஐந்து கோடி என, இந்த வருடம் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 25 கோடி இருக்கும்.

இதன் காரணமாக இந்த மினி ஏலத்திற்கு வரும் ரச்சின் ரவீந்திரா, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ் மாதிரியான அதிரடி வீரர்களில் ஒருவரையாவது சிஎஸ்கே நிர்வாகத்தால் வாங்க முடியும். இது சென்னை அணியை மேலும் பலப்படுத்தும்.

எப்படியும் ஐந்து வருடங்களுக்கு விளையாடும் வீரர்களை நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கண்டுபிடிக்கும். மேலே உள்ள மூன்று வீரர்களில் இருவர் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். இன்னொருவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். எனவே இவர்கள் ஒருவராவது சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விளையாடுவது உறுதி!