ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்ட 5 இந்திய வீரர்கள்

0
2498
Dhoni Slowest Fifty

ஒருநாள் போட்டி தொடரை பொறுத்தவரையில் முடிந்தவரை பந்துக்கு பந்து அடித்தாக வேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் டி20 போட்டியில் விளையாடுவது போல் விளையாடுகிறார்கள்.

குறிப்பாக டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது அரை சதத்தை குவித்தார். தற்பொழுது வரை ஏபி டிவிலியர்ஸ் தான் மிக குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த வீரராக இருக்கிறார். இந்திய வீரர்கள் மத்தியில் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இன்று வரை அவர்தான் இந்திய வீரர்கள் மத்தியில் அதிவேக அரைசதத்தை குவித்த வீரராக இருக்கிறார்.

ஆனால் ஒரு சில வீரர்கள் மிக அதிக பந்துகளை பிடித்து அரைசதம் குவித்துள்ளனர். அப்படி அரைசதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்

5. முகமது கைப் – 98 பந்து

2003 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனவே ராகுல் டிராவிட் உடன் இணைந்து முகமது கைப் இந்திய அணியை வெற்றிபெற வைக்க மிக மெதுவாக விளையாட தொடங்கினார். அதன் காரணமாக 98 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

4. சௌரவ் கங்குலி – 104 பந்துகள்

2007ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்திய அணியில் கங்குலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். அதன் காரணமாக பாகங்களையும் மிகப் பொறுமையாக விளையாடினார்.

மிகப் பொறுமையாக விளையாடிய காரணத்தினால் அவர் அரைச் சதம் குவிக்க 104 பந்துகளில் தேவைப்பட்டது. இறுதியில் இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. இருப்பினும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி இறுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

3. சௌரவ் கங்குலி – 105 பந்துகள்


2005ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கட்டுகளை வரை கொடுக்க ஆரம்பித்தது. எனவே கங்குலி நிலைத்து நின்று ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக அவர் அரைசதம் குதிக்க 105 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது. இருப்பினும் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

2. மகேந்திர சிங் தோனி – 107 பந்துகள்

2011ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதியது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது.

எனவே மகேந்திர சிங் தோனி மிக நிதானமாக விளையாட தொடங்கினார். அவர் அரை சதம் குவிக்க 107 பந்துகளில் தேவைப்பட்டது. அவர் 114 பந்துகளில் மொத்தமாக 54 ரன்கள் குவித்தார். இருப்பினும் இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

1. சடகோபன் ரமேஷ் – 110 பந்துகள்

1999 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது. அதில் சடகோபன் ரமேஷ் தனது அரைசதத்தை குவிக்க 110 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் களமிறங்கிய கென்யா இறுதியில் 162 ரன்கள் மட்டும் எடுத்து நிலையில், 58 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.