SL vs BAN.. விஸ்வரூபம் எடுத்த பங்களாதேஷ்.. 42 ஓவர்களில் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பரிதாபம்.. ஆரம்பமே அமர்க்களம்!

0
2820
Bangladesh

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று தொடங்கி இருக்கிறது. இன்று மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி திருவனந்தபுரத்தில் மழையின் காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் மோதிக் கொள்ளும் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த குசால் பெரேரா 24 பந்தில் ஆறு பவுண்டர்களுடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த குஷால் மெண்டிஸ் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

துவக்க வீரராக வந்து சிறப்பாக விளையாடிய பதும் நிசாங்கா 64 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பான துவக்கம் கிடைக்கும் இலங்கை அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இவர்களுக்குப் பிறகு இலங்கை அணியின் தனஞ்செய டி செல்வா மட்டும் தாக்குப் பிடித்து 79 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். 49.1 ஓவரில் இலங்கை அணி 263 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் மெகதி ஹசன் 9 ஓவர்களுக்கு 36 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் 20.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள். லிட்டன் தாஸ் 61 (56), தன்ஷித் ஹசன் 84 (88) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த தவ்ஹீத் ஹ்ரிடாய் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த மெகதி ஹசன் மிராஸ் 67* (64), முஸ்பிக்யூர் ரஹீம் 35* (43) என ரன்கள் எடுக்க, 42 ஓவரில் இலக்கை எட்டி பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பயிற்சி போட்டிதான் என்றாலும் கூட, இரு அணிகளும் முக்கிய போட்டி போலவே விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது!