SL vs AFG.. 37.1 ஓவரில் 292 ரன்.. தகுதி பெற 1 பந்தில் 3 ரன்.. திக் திக் மேட்ச்.. இலங்கை ஆப்கான் போட்டியில் உச்சகட்ட பரபரப்பு!

0
10388
Afghanistan

இன்று ஆசியக்கோப்பை முதல் சுற்றின் கடைசி போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் விறுவிறுப்பான முறையில், இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் வகையில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது!

இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்கின்ற சூழல் நிலவியது!

- Advertisement -

இந்த நிலையில் போட்டிக்கான டாஸில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இலங்கை அணிக்கு துவக்கத்தில் கருணரத்தினே 32, நிஷங்கா 41, குஷால் மெண்டிஸ் 92, சரித் அசலங்கா 36 என ரன்கள் எடுத்தார்கள்.

திடீரென சரிவை சந்தித்த இலங்கை கடைசி கட்டத்தில் வந்த துனித் வெல்லாகலே 33*, மதிஷா தீக் சனா 28 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நைப் பத்து ஓவர்களில் 60 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான அணி 37.1 ஓவரில் 292 ரன்கள் எடுத்தால் ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம் என்று ரன் ரேட் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தானனியின் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 4 மற்றும் இப்ராகிம் ஜட்ரான் 7 ரன்கள் என சீக்கிரம் வெளியேறினார்கள். அடுத்து வந்த குல்பதின் நைப் 22 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ரகமது ஷா 45, கேப்டன் ஷாகிதி 59 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் தரப்பில் பெரிய வெற்றி வெளிச்சம் தென்படவில்லை. ஆனால் நடுவில் வந்த முன்னாள் கேப்டன் முகமது நபி 32 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவிக்க ஆட்டம் ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியது.

இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் கரீம் ஜனத் 22, நஜிபுல்லா ஜட்ரான் 23 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டம் மிகப் பரபரப்பான கட்டத்தை எட்டியது. இலக்கை எட்ட வேண்டிய கடைசி 7 பந்துகளில், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஓவரை 20 வயதான இலங்கையின் வெல்லாலகலே வீச, அதை எதிர்கொண்ட ரஷித் கான் மூன்று பவுண்டரிகள் விளாசினார். 12 ரன்கள் இதன் மூலம் அந்த ஓவரில் வந்தது.

எனவே 37 ஓவர்கள் முடியும்பொழுது வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்த ஒரு பந்தை முஜீப் உர் ரகமான் எதிர்கொண்டார். அந்த ஓவரை தனஞ்செய டி சில்வா வீசினார். ஆனால் அந்தப் பந்தை நேராக அவர் தூக்கி அடிக்க ஆட்டம் இழந்தார். அத்தோடு ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்று கனவும் முடிந்து போனது.

இறுதியில் ஆப்கானிஸ்தான அணி ஒன்பது விக்கெட்டுகள் இழந்திருக்க, கைவசம் எக்கச்சக்க பந்துகள் இருக்க, மூன்று ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலமாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெறவும் இல்லை. கடைசியாக களத்திற்கு வந்த ஃபரூக்கி ஆட்டம் இழக்க, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அடுத்த சுற்றுக்கு நுழைந்தது!