“திறமை இருக்கு ஓகே.. ஆனா அதைவிட அதிகமா பயம் இருக்கு!” – இந்திய வீரர்கள் மீது நியூசிலாந்து வீரர் விமர்சனம்!

0
1639
ICT

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. இருந்தாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று இருந்த காரணத்தினால் இலங்கை அணியுடன் நாளை மோதுகிறது.

நேற்று பங்களாதேஷ் எதிரான போட்டிக்கு இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் சில முக்கிய வீரர்களையும், பவுலிங் யூனிட்டில் மிக முக்கியமான வீரர்களையும் இந்திய அணி வெளியில் அமர வைத்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது.

- Advertisement -

நேற்றைய ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எனவே இங்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகம் இருக்கும். மேலும் ரன் கொண்டு வருவது பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கடினமான வேலை.

இதன் காரணமாக நேற்று இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று விளையாடி இருந்தால், அதன் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும்.

ஆனாலும் கூட நேற்று இந்திய அணிக்கு பேட்டிங் வரிசை ஒன்பதாவது இடம் வரைக்கும் இருந்தது. அணியில் சுப்மன் கில் 121 ரன்கள் குவித்து இருந்தார். இப்படி இருக்கும் பொழுது, அந்த போட்டியை இந்திய அணி வெல்லாதது, சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட தடுமாறுவதை காட்டுகிறது.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் இடம்பெற்ற எல்லா வீரர்களும் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இருப்பார்கள். அதில் சிலர் ரிசர்வ் வீரர்களாக இருப்பார்கள். எனவே இவர்கள் உலகக்கோப்பையில் விளையாட கூடியவர்கள். இதனால் இந்த தோல்வி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நேற்றைய போட்டியை எடுத்துக் கொண்டால் பொதுவாக இந்திய வீரர்களுக்கு அப்படியான மைதானங்கள் மிகவும் வசதியான ஒன்று. சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்தியர்கள் மிகவும் வசதியாக இருக்கக்கூடியவர்கள். இப்படி இருந்தும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வீரர்களின் பயம் என்று பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டாவ்ல் கூறுகையில் “இந்திய அணியில் எல்லா வீரர்களும் திறமையானவர்கள். போட்டியில் தேவையான நேரத்தில் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுவதுதான் இவர்களுக்கு கடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் பிரச்சனையாக இருந்திருக்கிறது.

இந்திய வீரர்கள் வெளியே சென்று அதிரடியாக ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அதற்காக அவர்கள் என்ன சொல்லப்படலாம்? அவர்களைப் பற்றி என்ன எழுதுவார்கள்? என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!