2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ள 6 நட்சத்திர வீரர்கள்!

0
280
Warner Dhawan

அடுத்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து பல வீரர்கள் ஓய்வுபெற வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. காரணம், டி20 போட்டிகளில் வருகைக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகள் நீண்டதாகவும் சலிப்பானதாகவும், அதிக அளவில் உழைப்பை வாங்க கூடியதாகவும் இருப்பதாக வீரர்களும் ரசிகர்களும் நினைக்கிறார்கள்.

சமீபத்தில் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான காரணங்களால் ஓய்வு பெற வாய்ப்புள்ள வீரர்களில் இருந்து 6 நட்சத்திர வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் இந்தியா:

இந்தியாவிற்கு தற்காலத்தில் மிகச்சிறந்த ஸ்விங் பாஸ்ட் பவுலர் ஆன 32 வயதான இவர் காயங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தார், இதனால் இவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட வைக்காமல் இந்திய அணி நிர்வாகம் மிகப் பாதுகாப்பாக டி20 உலக கோப்பைக்காக வைத்திருக்கிறது. 121 ஒருநாள் போட்டிகளில் 141 விக்கெட்டுக்களை 5.08 எக்கானமியில் இருக்கும் இவரை அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கடுத்த இந்திய அணியின் ஒருநாள் போட்டி திட்டங்களில் இவர் இருப்பது கடினம்தான்.

ஆரோன் பின்ச் ஆஸ்திரேலியா :

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலிய வெள்ளைப் பந்து அணியின் கேப்டனான இவருக்கு முப்பத்தி ஐந்து வயதாகிறது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இரண்டிலும் விளையாடிவிட்டு இவர் முழுதாய் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இவரது தலைமையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது!

டேவிட் மில்லர் சவுத் ஆப்பிரிக்கா:

தற்பொழுது முப்பத்தி மூன்று வயதாகும் இவருக்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க 50 ஓவர் உலக கோப்பை போட்டியை கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். 146 ஒருநாள் போட்டிகளில் 3539 ரன்களை 40 ரன்கள் சராசரியில் அடித்திருக்கிறார். சிறந்த டி20 அதிரடி வீரரான இவர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, உலகமெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.

டிரென்ட் போல்ட் நியூசிலாந்து:

முப்பத்தி மூன்று வயதான லெப்ட் ஹேன்ட் பாஸ்ட் பவுலர் டிரென்ட் போல்ட் சமீபத்தில் நியூஸிலாந்து கிரிக்கெட்டின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். அடுத்த இரு ஆண்டுகளுக்குள் நடக்க இருக்கும் இரு உலகக்கோப்பை தொடர்களோடு இவர் முழுதாய் ஓய்வு பெற்று, உலகில் நடக்கும் டி20 தொடர்களில் கலந்துகொள்ள முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. இவர் ஒருநாள் போட்டிகளில் தொன்னூற்று மூன்று ஆட்டங்களில் 162 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஷிகர் தவான்:

முப்பத்தி ஆறு வயதான இவருக்கு இந்தியா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவரது வயதை கருத்தில் கொண்டு பார்த்தால் ஆண்டு நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இவருக்கான கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதில் பொருட்டு இவருக்கு ஒருநாள் அணியிலும் இடம் மறுக்கப்படலாம். இதனால் இவர் இந்த உலகக் கோப்பை முடிந்து ஒரு ஆண்டுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா:

உலகில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரரான முப்பத்தி ஐந்து வயதான இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக்கோப்பையோடு குறைந்தபட்சம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தானும் ஆரோன் பின்ச்சும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வார்னரே சமீபத்தில் கூறியிருந்தார். ஓய்வுக்குப் பிறகு பிறநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என்று நம்பலாம்.