மெக்ராத் வாசிம் அக்ரம் சாதனையை காலி செய்த சிராஜ்.. ஒரு போட்டியில் பல ரெக்கார்டுகள்!

0
6218
Siraj

16ஆவது ஆசிய கோப்பையில் இறுதி போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சனகா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தீர்மானமாக அறிவித்தார். ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்தியா அணி வாஷிங்டன் சுந்தரை மட்டும் பழைய அணியில் இருந்து அக்ஷரிடத்தில் சேர்த்துக்கொண்டது. இலங்கை தரப்பில் தீக்சனா இடத்தில் ஹேமந்த் துஷாரா வந்தார்.

முதல் ஓவரை வீசிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து பும்ரா மூன்றாவது பந்தில் குசல் பெரிராராவை விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுல் கேட்ச் மூலம் ஆட்டமிழக்க வைத்தார்.

இதற்கு அடுத்து முகமது சிராஜ் தனது இரண்டாவது மற்றும் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மொத்தமாக இலங்கையின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது மூன்றாவது ஓவரை வீசிய முகமது சிராஜ் இலங்கை அணியின் கேப்டன் சனகாவை கிளீன் போல்ட் செய்து தனது ஐந்தாவது விக்கட்டை கைப்பற்றினார். தான் வீசிய பதினாறாவது பந்தில் அவருக்கு ஐந்து விக்கெட் கிடைத்தது. இதற்கு அடுத்து பவர்பிளே முடிந்து குஷால் மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்தி தற்போது ஆறு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

முகமது சிராஜ் இந்த போட்டியில் தன்னுடைய முதல் 16 பந்தில் 5 விக்கெட் வீழ்த்தி, சமிந்தா வாஸ் செய்திருந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். இதன் மூலம் உலக சாதனையில் அவர் முதல் இடத்தில் தொடர்கிறார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பவர் பிளேவில் 5 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் ஐந்து விக்கெட் பவர் பிளேயரில் கைப்பற்றியது கிடையாது. புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் பவர் பிளேவில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக அஜந்தா மெண்டிஸ் ஆறு விக்கெட் கைப்பற்றியது இருக்கிறது. தற்பொழுது இந்த சாதனையையும் முகமது சிராஜ் சமன் செய்து இருக்கிறார்.

மேலும் 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது சிராஜ் 7 ரன்களுக்கு முதல் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மகாயா நிடினி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

இதற்கு அடுத்து 2002 ஆம் ஆண்டிலிருந்து முதல் 10 ஓவர்களில் மிகக் குறைந்த ஆவரேஜ் கொண்டவராக 16.16 என்று முகமது சிராஜ் இருக்கிறார். மெக்ராத் 19.47, மேட் ஹென்றி 20.11, வாசிம் அக்ரம் 20.62 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்!