“சிராஜ்தான் நம்பர்-1 பவுலர்.. பும்ரா விக்கெட் எடுக்கலதான்..!” – தீபக் சகர் மனம் திறந்த அதிரடி பேட்டி!

0
968
Deepak

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி அசாத்திய செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது.

மிகக் குறிப்பாக முகமது சிராஜ் மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அவர்தான் வீசிய முதல் 16 பந்துகளில் இலங்கை அணியின் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, ஏறக்குறைய போட்டி துவங்கிய நான்காவது ஓவரிலேயே மொத்தமாக முடித்து விட்டார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பும்ரா, சமி, சிராஜ் என்று உலக தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதற்கு முன்னால் இந்த அளவிற்கு இருந்தது இல்லை.

இன்னொரு பக்கத்தில் எடுத்துக் கொண்டால் பேட்டிங் பங்களிப்பும் செய்யக்கூடிய பேகபந்துவீச்சாளர்களாக சர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சகர் இருவரும் இருக்கிறார்கள். இதில் தீபக் சகர் பேட்டிங் மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கும். மேலும் அவர் புதிய பந்தில் வீசக்கூடியவர். தொடர்ச்சியான காயங்கள் அவரை தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவிடாமல் செய்துவிட்டது.

தற்பொழுது மனம் திறந்து பேசி உள்ள தீபக் சகர் கூறும் பொழுது “வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விளையாட்டு நேரம் மற்றும் ஓய்வு இரண்டுமே மிக முக்கியம். அவர்கள் விளையாடவும் செய்ய வேண்டும் அதே சமயத்தில் ஓய்வும் எடுக்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் ரிதம் காப்பாற்றப்படும். ரிதத்தில் இருக்கும் பொழுதுதான் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியிடம் இரண்டு மூன்று போட்டிகள் உலகக் கோப்பைக்கு முன்பாக இருக்கிறது. இதன் மூலம் நாங்கள் நல்ல பயிற்சியை பெறுவோம். ஒரு நல்ல எதிரணி கிடைத்திருக்கிறது. எனவே நல்ல முறையில் தயாராகும். இதன் மூலம் வீரர்களை புத்துணர்ச்சிவுடனும் ரிதத்திலும் வைக்க முடியும்.

சிராஜ் மிக அற்புதமாக பந்து வீசினார். கடந்த ஆண்டிலிருந்து அவர் இதே போல்தான் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் அவர் எங்களின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார். நாங்கள் நீண்ட காலமாக பெரிய தொடர் எதையும் வெல்லவில்லை. எனவே நாங்கள் ஆசிய கோப்பை வென்றது நல்ல விஷயம். இது எங்களுக்கு உலகக் கோப்பைக்கு செல்வதற்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும்.

- Advertisement -

கிரிக்கெட்டில் விக்கெட் எடுப்பது என்பது உங்கள் கைகளில் இல்லை. நீங்கள் எப்படி பந்து வீசினீர்கள் என்பதுதான் முக்கியம். சில சமயங்களில் நீங்கள் நன்றாக பந்து வீச மாட்டீர்கள் ஆனால் விக்கெட்டுகள் கிடைக்கும். சில சமயம் மிக நன்றாக வீசியும் விக்கெட் கிடைக்காது. பும்ரா நன்றாக விதத்தில் இருக்கிறார். சிறப்பாக பந்து வீசுகிறார்.

எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால், உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை நாங்கள் வென்றோம். மேலும் மற்ற அணிகள் எல்லாமே போட்டி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதால் முதல் நான்கு அணிகளை கணிப்பது கடினமானது!” என்று கூறியிருக்கிறார்!