சிராஜ் மிரட்டலடி பவுலிங்.. கிங் கோலி பேட்டிங்கில் கலக்கல்.. பஞ்சாப் கிங்ஸை பந்தாடிய ஆர்சிபி அசத்தல் வெற்றி!

0
298

பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஒரு ரன் அவுட் என அட்டகாசமாக செயல்பட்டார் சிராஜ். 18.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப் அணி. ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டிகள் மொகாலியில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் எடுத்தது.

- Advertisement -

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே கலக்கினர். இந்த ஜோடியின் விக்கெட்டை எடுப்பதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினர் மிகவும் போராடி வந்தும் பலன் அளிக்கவில்லை.

முதல் விக்கெட்டிற்கு டு பிளசிஸ்-விராட் கோலி ஜோடி 137 ரன்கள் சேர்த்த பிறகு, விராட் கோலி 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். பின்னர் டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 0 ஓவர்கள் முடிவில் நான்கு விகெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள ஆதிக்கம் செலுத்தி ரன்குவிக்க விடாமல் தடுத்ததோடு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதர்வா(4), ஷார்ட்(8), லிவின்ஸ்டன்(2) சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து தடுமாற்றம் கண்டது பஞ்சாப் அணி.

அடுத்துவந்த ஹர்ப்ரீத் சிங்(13), சாம் கர்ரன்(10) இருவரும் நன்றாக ஆரம்பித்து அதை பெரிதாக எடுத்துச்செல்ல முடியாமல் ஆட்டம் இழந்தனர். இதனால் 76 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தனக்குத்தானே அழுத்தம் கொடுத்துக் கொண்டது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வந்த துவக்க வீரர் பிரப்சிம்ரன் 30 பந்துகளில் 46 ரன்கள் இருக்கையில், வெயின் பர்னல் பந்தில் தவறான ஷார்ட் விளையாடி போல்டானார். அடுத்ததாக உள்ளே வந்த ஜித்தேஷ் சர்மா சிறிதுநேரம் நம்பிக்கை அளித்து வந்தார். பின்னர் 41 ரன்கள் அடித்திருந்தபோது அவரும் தவறான நேரத்தில் அவுட் ஆனார.

சிராஜ், 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 18.2 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது பஞ்சாப் கிங்ஸ் அணி. பந்துவீச்சில் மிரட்டிய முகமது சிராஜ் நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வணிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகள். வெயின் பர்னல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.