அடுத்த போட்டியில் சிராஜ், ஷமி இருக்கமாட்டார்களா? என்ன காரணம்? – ரோகித் சர்மா பேட்டி!

0
5685

அடுத்த போட்டியில் சிராஜ் மற்றும் ஷமி இருவரும் இருப்பது சந்தேகம் தான் என ரோகித் சர்மா அளித்த பேட்டியின் மூலம் தெரிகிறது.

நியூசிலாந்து அணி உடன் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

சம்பிரதாயமாக நடத்தப்படும் 3வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி வருகிற 24ம் தேதி நடக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரின் பந்துவீச்சு. இப்போட்டியில் சிராஜ், 6 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

முகமது ஷமி 6 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 12 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே இந்த ஜோடி விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் ஷமி 1 விக்கெட்டும் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்கள் இப்படி அபாரமாக செயல்பட்டு வருவது மிக சிறப்பானது என போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

அந்த பேட்டியில், சிராஜ் மற்றும் ஷமி உடல்நிலை மிகவும் முக்கியம். அதற்காக இவர்களை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இவர்களில் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்பதால், அதையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு உரிய ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டிருந்தார்.

இதனை வைத்துப் பார்க்கையில் சம்பிரதாயப்படி நடத்தப்படும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு உம்ரான் மாலிக், மற்றுமொறு பவுலர் உள்ளே எடுத்து வரப்படலாம் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.