என்னை இந்திய அணிக்கு செலக்ட் பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல.. இதான் காரணம் – ரியான் பராக் பேட்டி

0
202
Riyan

இந்த வருடம் ஐபிஎல் தொடர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர் ரியான் பராக்குக்கு மிகச் சிறந்த தொடராக அமைந்தது. இதன் மூலம் அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. தான் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று ரியான் பராக் பேசியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரியான் பராக் 15 போட்டிகளில் விளையாடி 574 ரன்கள் குறித்து அசத்தியிருக்கிறார். இவருடைய ஆவரேஜ் 52 எனவும் ஸ்ட்ரைக் ரேட் 149 எனவும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. மேலும் இவர் பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக வந்து இவ்வளவு ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவரின் திறமையை நம்பி ராஜஸ்தான் அணி 4 ஆண்டுகளாக தொடர்ந்து இவரை தக்கவைத்து வந்தது. மேலும் கடந்த ஆண்டு உள்நாட்டு தொடரில் இவர் மிகச்சிறப்பாக விளையாடுகிறார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இந்த முறை இவரை விளையாட வைத்தார். அது ராஜஸ்தான் அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன்னுடைய எதிர்காலம் குறித்து பேசி உள்ள ரியான் பராக் கூறும்பொழுது “ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை இந்திய அணியின் தேர்வு செய்துதான் ஆக வேண்டும். சரியா? இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. நான் இந்தியாவுக்காக நிச்சயம் விளையாட போகிறேன். ஆனால் அது எப்போது என்று நான் கவலைப்பட போவது கிடையாது. நான் ரன்கள் எடுக்காத பொழுதும் கூட இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று சொல்லி இருக்கிறேன்.

இது நான் என்னை நம்புவது சம்பந்தப்பட்டது திமிர் கிடையாது. நான் பத்து வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பொழுது என் அப்பா மற்றும் எனக்கு இதுதான் திட்டமாக இருந்தது. நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் என்பதுதான் அது. நான் அடுத்து இந்திய அணியின் எந்த டூரில் அணியில் இடம்பெறப் போகிறேன் என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. ஆனால் நான் விளையாடுவேன்.

- Advertisement -

இதையும் படிங்க: ஒரு போட்டி கூட நடக்காவிட்டாலும்.. இந்தியாவுக்கு அடித்த லக்.. டி20 உ.கோ-ல் புதிய விதி

கடந்த ஆண்டுகளில் இருந்து நான் எடுத்துக் கொண்ட ஒரு மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், உங்களை நீங்கள் நம்பும் பொழுது அது பலனளிக்கிறது. ஏனென்றால் பலர் பல விதமான விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் இறுதியில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நான் அதைத்தான் செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.