சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்புவார்.. அங்க இதான் நடக்கும் – சைமன் டால் பேச்சு

0
76
Dhoni

சிஎஸ்கே அணியில் எந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் மேலும் ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து நியூசிலாந்து முன்னால் வீரர் சைமன் டால் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஏலத்தில் வருவதற்கான வாய்ப்பு

ரிஷப் பண்ட் சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் தான் ஏலத்திற்கு வந்தால் எவ்வளவு விலைக்கு விற்கப்படுவேன் என்று ரசிகர்களிடையே கேள்வி கேட்டிருந்தார். இதன் மூலம் அவர் டெல்லி அணியை விட்டு வெளியே வருகிறார் என்கின்ற பேச்சுகள் வலிமை பெற ஆரம்பித்தது.

மேலும் அவர் விபத்தில் சிக்கி மறு வாழ்வில் இருந்த பொழுது நீண்ட நாட்கள் மகேந்திர சிங் தோனியின் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அவர் தோனி உடன் நெருக்கமாக இருக்கிறார். இதன் காரணத்தால் சிஎஸ்கே அணியில் தோனி சென்றதற்கு பிறகு, அவருடைய இடத்திற்கு ரிஷப் பண்ட்டை கொண்டு வரும் வேலை நடக்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தோனியின் இடத்தை நிரப்புவார்

இதுகுறித்து பேசி இருக்கும் சைமன் டால் கூறும்பொழுது “சிஎஸ்கே அணி தக்க வைக்கும் வீரர்களில் முதல் இடத்தில் கேப்டன் ருதுராஜ் இருப்பார். இதற்கு அடுத்த இடத்தில் நிச்சயமாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார். இதற்கு அடுத்த இடத்தில் பதிரனா வந்து விடுவார்”

“மேலும் மகேந்திர சிங் தோனி தக்கவைப்புக்கான இறுதி நாள் அன்றுதான் தான் கிடைப்பேனா இல்லையா என்பது குறித்து கூறுவேன் என்று தெரிவித்ததாக செய்திகள் இருக்கிறது. இதன் மூலம் அவர் தான் வருவாரா மாட்டாரா என்பதை ஒரு யூகத்தில் வைத்திருக்கிறார்”

இதையும் படிங்க : நியூசி வரலாற்று வெற்றி.. சச்சின் வெளியிட்ட மனப்பூர்வமான வாழ்த்து.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

“இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரச்சின் ரவீந்திரா விளையாடிய விதத்தை பார்த்த பிறகு அவரை தக்க வைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்தால், அவருக்காக சிஎஸ்கே அணி பெரிய தொகைக்கு சென்று வாங்க முயற்சி செய்யும். தோனியின் இடம் அவரை வைத்து நிரப்பப்படும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -