இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு இந்திய அணியின் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்வது ஒரு உலகக் கோப்பை தொடரை வெல்வதை விட மிக கடினமானது என வெளிநாட்டு வீரர்கள் கூறுவார்கள். நியூசிலாந்து அணி அப்படிப்பட்ட ஒரு சாதனை வெற்றியை பெற்று இருக்கிறது.
இலங்கையில் கிடைத்த பாடம்
நியூசிலாந்து அணி இந்தியா வருவதற்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுழல் பந்துவீச்சு சாதகமான சூழ்நிலையில் விளையாடி படுதோல்வி அடைந்தது. இதற்குப் பிறகு நியூசிலாந்து சென்று சில திட்டங்களை வகுத்து வந்தது.
இதன்படி இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுவது என்று முடிவு செய்து அதன்படி விளையாடியது. இந்த தொடரில் அவர்களுக்கு இந்த திட்டம் பெரிய அளவில் பலன் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.
கனவு மாதிரியான வெற்றி
இது குறித்து இந்திய அணியின் லெஜெண்ட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து நியூசிலாந்து அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் விளையாடி வந்த காலங்களிலும் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி இந்திய டெஸ்ட் தொடர் வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வேதனையா இருக்குதான்.. இதுக்காக நான் அதுல எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன் – ரோகித் சர்மா திட்டவட்டம்
இது குறித்து வாழ்த்து கூறிய சச்சின் “வெளியில் இருந்து வரும் எந்த ஒரு அளிக்கும் இந்தியாவை டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது பெரிய கனவு. நியூசிலாந்து அணி சிறப்பான முறையில் விளையாடி அதை செய்திருக்கிறது. நீங்கள் ஒரு அணியாக சேர்ந்து விளையாடி ஆல்ரவுண்ட் செயல்பாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவிடம் இப்படி வெல்ல முடியும். நியூசிலாந்திடம் இந்தத் திறமை இருக்கிறது. சான்ட்னருக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள். அவர் கைப்பற்றிய 13 விக்கெட்டுகள் வெற்றிக்கு மிகவும் முக்கியமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






