தோனி சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தி இருக்கட்டும்.. ஆனா அன்னைக்கு அவர் செய்தது தப்பு – சைமன் டால் பேட்டி

0
146
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடைசிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடுகிறது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் தோல்வி அடைந்தது. ஆனால் கடைசியில் வந்த தோனி 16 பந்துகளுக்கு ஆட்டம் இழக்காமல் 37 ரன்கள் எடுத்து, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இந்த போட்டி குறித்து ஏற்கனவே பேசி இருந்த அம்பதி ராயுடு கூறும்பொழுது “தோனி சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தன்னுடைய பேட்டிங் எப்படி இருக்கிறது என்று பரிசோதனை செய்யதான் முயற்சி செய்தார், அவர் தற்பொழுது நன்றாக இருப்பதை உணர்ந்து இருப்பார், எனவே அவர் மேற்கொண்டு பேட்டிங் வரிசையில் மேலே வரமாட்டார், நல்ல நம்பிக்கையில் இருப்பதால் அவர் ஃபினிஷர் ஆகவே தொடர்வார்” என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

குறிப்பிட்ட டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் தோனி சில பந்துகளுக்கு ரன்கள் எடுக்க முயற்சி செய்யவில்லை. ஜடேஜாவை அப்படியே பந்துவீச்சாளர் முனையில் இருக்க சொல்லிவிட்டார். அப்படியான சில பந்துகளை பேட்டில் தடுத்து விட்டு, அடுத்த பந்துகளில் பெரிய ஷாட் அடிக்க முடியுமா? என்பதை மட்டுமே பார்த்தார்.

அவருடைய பேட்டிங் அணுகுமுறையை பார்த்த பொழுது அவர் போட்டியை வெல்வதற்காக விளையாடவில்லை, மாறாக தன்னுடைய பேட்டிங் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே விளையாடினார் என்பது போல நன்றாகவே தெரிந்தது. வழக்கமாக தோனி வெல்வதற்கு கடினமான போட்டிகளில் ரன் ரேட்டை கீழே செல்ல விடாமல் காப்பாற்றுவதற்காக இப்படி விளையாடும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் கூறும் பொழுது “தோனியின் இன்னிங்ஸ் பற்றி மிகப் பெரிய பரவசம் இருந்தது உண்மைதான். ஆனால் அவர் அந்த போட்டியில் நிறைய பந்துகளை தடுத்து டாட் பந்துகளாக விளையாடினார். அதற்குப் பிறகு அவர் ரன்கள் எடுக்கத் தொடங்கிய பொழுது அதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு இதுதான் சிறந்த தோனி என்று. ஆனால் அவர் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்காமல் இருந்த முடிவு தவறானது.

- Advertisement -

இதையும் படிங்க : நடராஜன் இருந்தா சிஎஸ்கேவுக்கு எடுத்ததும் செக் வைக்கலாம்.. ருதுராஜுக்கு இந்த பிரச்சனை இருக்கு – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

தோனி போட்டியை வெல்ல முயற்சி செய்திருக்க வேண்டும். அவர் சில காலத்திற்குப் பிறகு நேரடியாக கிரிக்கெட் விளையாட வருகிறார், எனவே தன்னுடைய பேட்டிங் ஃபார்மை கண்டுபிடிக்க முயற்சி செய்திருக்கலாம். நான் இதை ஏற்க மாட்டேன். குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நடந்ததோ அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அங்குநடந்தது ஒரு மோசமான விஷயம். அவர் ரன்கள் எடுத்திருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.