இந்திய அணியில் சென்னை வீரர் சிமர்ஜித் சிங் – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வலைப்பயிற்சி பவுலர்களாக பங்கேற்கும் இளம் வீராகள் பட்டியல்

0
123
Simarjeet Singh and Kamlesh Nagarkoti

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தலைமையில் இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதற்கு முன்பு நியூசிலாந்துடன் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இங்கிலாந்தில் மோதி தோற்று இருந்தது!

இந்தத் தொடருக்கான மூன்று நாள் பயிற்சி போட்டியில் கவுன்டி செலக்ட் லெவன் அணியுடன் மோதி டிரா செய்த இந்திய அணி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் மிகச்சிறப்பாக விளையாடியது, ஆனால் கடைசி நாளில் பெய்த மழையால் வெற்றி கைநழுவி போட்டி டிரா ஆனது.

ஆனால் இதற்குப் பரிகாரமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கடுத்து ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 71 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி தந்து தொடரைச் சமன் செய்தது.

இந்த நிலையில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு திட்டத்தினால், இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கா இல்லை சமனா என்று முடிவு செய்யும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்க இருந்து, கோவிட் தொற்றால் போட்டி துவங்காமலே நிறுத்தப்பட்டு, அடுத்த வருடத்தில் இந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடி, இதனால் உண்டான நஷ்டத்தை ஈடுசெய்யுமென, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியளித்து, அங்கிருந்து கிளம்பி, யு.ஏ.இ-யில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் சென்றனர்.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியளித்திருந்த அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் திரும்ப விளையாடவும், மேலும் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடவும் இந்திய அணி இங்கிலாந்திற்குத் தற்போது சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியினரோடு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக சி.எஸ்.கே அணியில் இந்த ஆண்டு விளையாடிய சிமர்ஜித் சிங், இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சு வீரரான நவ்தீப் சைனி, ஐ.பி.எல் தொடரில் தற்போது டெல்லி அணியால் 1.10 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கும் கமலேஷ் நாகர்கோட்டி ஆகிய மூன்று வீரர்களும் சென்றுள்ளனர். ஒருவேளை இந்திய அணி வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் இவர்களையே பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். மேலும் இவர்களுக்கு இங்கிலாந்தின் சூழ்நிலைகள் பழக்கப்படும், அத்தோடு புதிய அனுபவமும் கிடைக்கும்!