இன்று கோவா அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மீது கடுமையான விமர்சனத்தை சமூக வலைதளத்தில் வைத்து வருகிறார்கள்.
தற்போது விஜய் ஹசாரே டிராபியின் இரண்டாவது சுற்றில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் முதல் முறையாக விளையாட வந்தார். இரண்டாவது சுற்று முதல் போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுருண்ட கோவா
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கோவா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து சுயாஸ் பிரபுதேசாய் 43 பந்தில் 66 ரன்கள், லலித் யாதவ் 59 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 211 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாட வந்த பஞ்சாப் அணிக்கு சுப்பன் கில் 11, பிரப்சிம்ரன் சிங் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் வளர்ந்தார்கள். ஹர்னூர் சிங் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 90 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி இறுதியாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய ரசிகர்கள் விமர்சனம்
சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருந்தார். ஆனால் இதற்கடுத்து ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றில் அவர் மிகவும் சுமாரான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். மேலும் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான டி20 தொடரிலும் தடுமாறினார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விராட் கோலி கிரிக்கெட் எடுத்த அந்த முடிவு ரொம்ப தப்பானது.. ஈஸியானத செலக்ட் பண்ணிட்டாரு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இந்த நிலையில் அவர் விஜய் ஹசாரே டிராபியில் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். எனவே கில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே ரன்கள் எடுப்பார் எனவும், அவருக்கு குஜராத் அகமதாபாத் மைதானம் மட்டுமே சாதகமானது எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.






