தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் இருவரும் சிறப்பாக விளையாட வருவது குறித்து பேசி உள்ள சஞ்சய் மன்ச்ரேக்கர் விராட் கோலி குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவங்களில் விளையாடி வருகிறார். அதேசமயத்தில் ஸ்மித் ஒருநாள் வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் கிடைத்து வருகிறது. ஆனால் விராட் கோலி டி 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
விராட் கோலி தவறான முடிவு எடுத்தாரா?
தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது. ஆனால் விராட் கோலி உச்சபட்ச பார்மில் இருந்த நேரத்தில் கூட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்தார். கிரிக்கெட் உலகின் மூத்த வீரர்கள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரும் மரியாதையை பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள்.
இதன் காரணத்தால் விராட் கோலி எல்லா வடிவத்தில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 39 வயது வரையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அடுத்த வருடமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அவர் அறிவித்தது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரது சக போட்டியாளர்கள் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாட வருகிறார்கள்.
எனக்கு சோகமாக இருக்கிறது
இதுகுறித்து சஞ்சய் மன்ச்ரேக்கர் பேசும் பொழுது ” தற்போது ஜோ ரூட் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு நினைவு விராட் கோலி இடம் செல்கிறது. விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக செல்லாத பொழுது அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க அவர் தவறிவிட்டார். அவர் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று முதல் தர போட்டிகளில் விளையாடி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்து சாதித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்”
இதையும் படிங்க : கில்லை நீக்கியது சரினு நினைக்காதீங்க.. அப்படி செஞ்சது தப்பு.. இதைத்தான் செஞ்சிருக்கணும் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு
“விராட் கோலி இதை செய்யாமல் எடுத்ததும் ஓய்வை அறிவித்துவிட்டார். அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சுலபமான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு பேட்ஸ்மேனை அதிகபட்சம் சோதிக்கும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடு இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவு காதலித்தார் இல்லையா?!” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.






