இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வருவாரா என்பது குறித்து பிசிசிஐ வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் பேட்டிங் செய்ய வந்த கில் ஒரு பவுண்டரி அடித்தவுடன் கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறினார். பிறகு இந்திய அணியின் முதல் இன்னிங்சில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய வரவில்லை.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு கொடுத்திருக்கிறது. போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த இலக்கை இதுவரையில் யாரும் எட்டி வெற்றி பெற்றதில்லை என்பது முக்கியமானது. இந்த ஆடுகளமும் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது.
மேலும் இந்திய அணி தற்போது ஒரு ரன் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் விளையாட வராவிட்டால் அது இந்திய அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நிலை இருக்கிறது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அன்றைய நாள் முடிவில் அவரை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்”
இதையும் படிங்க : 3வது நாளில் அதிரடி திருப்பம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. இந்தியா வெல்லுமா?.. தென் ஆப்பிரிக்கா அசத்தல்
“அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இனி இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட மாட்டார். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படுவார். என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அவர் விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.