இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 153 ரன் எடுத்து 123 ரன் டார்கெட் கொடுத்திருக்கிறது.
தற்போது ஆடுகளும் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருக்கின்ற காரணத்தினால், தென் ஆப்பிரிக்கா அணி கொடுத்திருக்கும் இந்த டார்கெட் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
அசத்திய தென் ஆப்பிரிக்கா
நேற்று தென் ஆப்பிரிக்கா 93 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கார்பின் போஸ் 25 ரன்கள் எடுத்து, இலக்கு நூறு ரன்கள் தாண்ட உதவி செய்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சைமன் ஹார்மர் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேசவ் மஹாராஜ் ரன்கள் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா ஆட்டம் இழக்காமல் 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் இதுவரை இவரே அரை சதம் அடித்திருக்கிறார்.
திடீர் மாற்றம்
நேற்று முழுவதும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க இழந்த மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகளை முகமது சிராஜ் மற்றும் ஒரு விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்கள். இந்த மாற்றம் இந்திய அணிக்கு உதவுமா இல்லை எதிராக செல்லுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதையும் படிங்க : கொல்கத்தா ஆடுகளம் ஒரு கேலிக்கூத்து.. ஹர்பஜன் சிங் விமர்சனம்.. ஆனால் அஸ்வின் ஆதரவு.. பரபரப்பான கிரிக்கெட் களம்
கம்பீர் பயிற்சியில் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி மொத்தமாக இழந்தது பெரிய பிரச்சனைகளை உருவாக்கியது. தற்போது இந்த டெஸ்ட் போட்டியும் ஒரு முக்கியமான கட்டத்துக்குள் நுழைந்திருப்பதால் யார் வெல்வார்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாத நிலைதான் காணப்படுகிறது.






