எட்டு அணிகள் பங்குபெறும் டி20 ஆசிய கிரிக்கெட் கோப்பை செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐபிஎல் இல் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரருக்கு டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆசியக் கோப்பையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆசிய கோப்பை டி20
இந்தியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்குபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது. மொத்தமாக 8 அணிகள் இரண்டு பிரிவுகளில் மோதுகின்றன. அடுத்த வருடம் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி பெறும் விதமாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதற்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்படும் இந்த அணியில் சுப்மான் கில் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் புவனேஸ்வர் குமாரை ஆசிய கோப்பையில் இடம்பெற வைப்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவருக்கு வாய்ப்பு கொடுங்க
இது குறித்து அவர் கூறும்போது “புவனேஸ்வர் குமாரை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். தற்போது அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அதற்கு முன்பு அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை, ஆனால் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. ஸ்டார் வீரர்களுக்கு பரிதாபம்.. ரசிகர்கள் கோபம் – என்ன நடந்தது?
மக்கள் ஏன் அவரைப் பார்ப்பதில்லை என்று எனக்கு தெரியவில்லை. புவி ஒரு சிறந்த புதிய பந்துவீச்சாளர். புவனேஸ்வர் குமாரை தற்போது மிகவும் தீவிரமாக பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 2011 ஆம் ஆண்டு அவரது தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று சரித்திரம் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.






