ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக இருப்பதை விட இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து ஒரு குறிப்பிட்ட வெற்றியை பெறுவது தான் மிகவும் முக்கியமான விஷயம் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் விராட் கோலியும் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடும்? என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கவலை தரும் புள்ளி விபரம்
இதுவரையில் ஆசிய மண் தாண்டி சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்தது கிடையாது. அவர் இரண்டு முறை ஆஸ்திரேலியா சுற்றும் பயணத்தில் இருந்த பொழுதும் கூட அவரிடமிருந்து சதம் வரவில்லை. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.
இதன் காரணமாக கேப்டனாக செயல்படுவதை விட பேட்ஸ்மேனாக வெளிநாட்டு மண்ணில் அவர் எப்படி செயல்படுவார்? என்கின்ற சந்தேகமும் கேள்வியும் இருந்து வருகிறது. ஆனால் தன்னால் இரண்டிலும் சாதிக்க முடியும் என கில் கூறி வருகிறார். மேலும் கம்பீர் இளம் வீரர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விரும்புகிறார். எனவே இந்திய நிர்வாகத்தின் இந்த முயற்சி வெற்றி அடையவில்லை என்றால் பெரிய விமர்சனத்தை சந்திக்கும்.
ஐபிஎல்-லை விட இது முக்கியம்
“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இங்கிலாந்து வருவதற்கு அதிக முறை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நீங்கள் தலைசிறந்த கேப்டனாக இருந்தால் அதிகபட்சமாக மூன்று முறை வரலாம். இல்லையென்றால் இரண்டு முறை வருவதற்குதான் பெரும்பாலும் வாய்ப்பு இருக்கும்”
இதையும் படிங்க : பும்ரா GOAT பவுலர் எல்லாம் கிடையாது.. இவர்தான் எப்பவும் பெஸ்ட் பவுலர் – இங்கி டேவிட் லாயிட் விமர்சனம்
“ஆனால் ஐபிஎல் தொடர் இப்படி கிடையாது. நீங்கள் வருட வருடம் கேப்டனாக ஐபிஎல் தொடரை சந்திக்க முடியும். உங்களுக்கு அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கேப்டனாக இருந்து டெஸ்ட் தொடரை வெல்வது மதிப்பு மிக்க மற்றும் பெரிய சாதனையாகும்” என்று கூறியிருக்கிறார்.






