இங்கிலாந்து முன்னால் வீரர் டேவிட் லாயிட் இந்திய நட்சத்திர ஏகப்பந்து வீச்சாளர் எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளர் என்ற அளவுக்கு சிறந்தவர் கிடையாது என கூறியிருக்கிறார்.
இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. தற்போதைக்கு பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட முடியும் என்று அவரே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் வாகன் – டேவிட் லாயிட் பாட் காஸ்ட்
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் இங்கிலாந்து முன்னால் வீரர் டேவிட் லாயிட் பங்கு பெற்றார்கள். அதில் மைக்கேல் வாகன் எல்லா காலத்திலும் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறார் என்று கூறினார். ஆனால் இன்னொருவரான டேவிட் லாயிட் இதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதுகுறித்து அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது “பும்ரா எல்லா காலத்திலும் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் கிடையாது. ப்ரெடி ட்ரூமேன்தான் எல்லா காலத்திலும் சிறந்தவர். அவர் சிறப்பான மின்னல் போன்ற வேகத்தைக் கொண்டவர்” என்று கூறினார். ஆனாலும் மைக்கேல் வாகன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை வேகம் முக்கியமில்லை என்று மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா மெக்ராத் மாதிரி
இந்த நிலையில் பும்ரா பற்றி இங்கிலாந்து முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது ” பும்ரா பந்து வீசப்படும் பொழுது அவர் ஜாக்கிங் செய்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள். பந்து 70 மைல் வேகத்தில் உங்களிடம் வரலாம் என்று உங்களுக்கு தோணும். ஆனால் அந்த பந்து 90 மைல் வேகத்தில் வந்து உங்களை தாக்கும். அவர் எப்பொழுதும் நிலையான பேலன்ஸ் இருக்கக்கூடிய ஒரு பவுலர்”
இதையும் படிங்க : நான் கருண் நாயர ஆட வைக்க மாட்டேன்.. இதுதான் என்னோட பிளேயிங் XI – ரகானே அதிரடி விருப்பம்
“நான் பார்த்ததிலேயே மிகவும் சமநிலை கொண்ட பவுலராக மெக்ராத் இருந்தார். தற்போது அவரைப் போலவே பும்ரா இருக்கிறார். நிச்சயமாக இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளிலும் அவரை எதிர்த்து விளையாட விரும்பாது. அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்றால் நிறைய விக்கெட் எடுக்கப் போகிறார் என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார்.






