என்னை முதலில் மதிக்கணும்.. நான் கேப்டனா இருந்தா..முதல்ல 2 விஷயம் எதிர்பார்ப்பேன் – சுப்மான் கில் பேட்டி

0
1250

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணியின் துணை கேப்டனான சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் கேப்டன் பதவி குறித்து கில் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

துணை கேப்டனாக நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரரான சுப்மான் கில்லை எதிர்கால கேப்டனாக பார்க்கிறது. அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவரை துணை கேப்டன் ஆகவும் நியமித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய கில் 96 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவிற்கு பிறகு அவரே இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என்று தெரிகிறது. கில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் எந்த மாதிரியான கேப்டன் என்பதை வெளிப்படுத்த இன்னும் காலம் இருக்கிறது எனவும், ஆனால் தன்னை பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்று அழைப்பதுண்டு என சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

வீரர்களை ஊக்கப்படுத்துவேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் எந்த மாதிரியான கேப்டனாக இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் அளிக்க இன்னும் நேரம் தேவை என்று நினைக்கிறேன். என்னுடைய கேப்டன்ஷி பாணியில் இன்னும் பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனால் வீரர்களிடமிருந்து என்ன கருத்து வந்தாலும் என்னை பந்துவீச்சாளர்களின் கேப்டன் என்று அழைப்பதுண்டு. ஒரு வீரராக என்னிடம் சிறந்ததை வெளிப்படுத்த முடியும் என்று நான் விரும்புவதால் விளையாட்டில் ஈடுபட விரும்புகிறேன்.

இதையும் படிங்க:ஒரு கிரிக்கெட்டரா எனக்கு அவரோட கஷ்டம் புரியுது.. ரோஹித் இதை செய்யதான் முயற்சி பண்றார் – அஸ்வின் பேட்டி

எனது பந்துவீச்சாளர்களின் திட்டங்களை நம்புகிறேன். நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய பொறுப்பாகும். செயல்திறனால் வழிநடத்துவது என்பது முக்கியமான விஷயம். உங்களுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் போது வீரர்களின் மரியாதையை பெறுவதும், உங்களுக்கு ஏன் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதும் மிகவும் முக்கியம். இதுவே எனது குறிக்கோளாகும். மேலும் ரோகித் மற்றும் கௌதிபாய் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்” என கூறுகிறார்.

- Advertisement -