ஒரு கிரிக்கெட்டரா எனக்கு அவரோட கஷ்டம் புரியுது.. ரோஹித் இதை செய்யதான் முயற்சி பண்றார் – அஸ்வின் பேட்டி

0
491

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

தற்போது ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மோசமான பார்மில் ரோஹித்

சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோசமான பேட்டிங் சரிவை சந்தித்த ரோஹித் சர்மா உள்நாட்டு தொடரில் விளையாடும்படி அறிவுறுத்தப்பட்டார். மேலும் உள்நாட்டுத் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா நன்றாக செயல்படுவார் என்று அவர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா 2 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் உள்ள மோசமான ஃபார்மினால் வெள்ளை பந்து தொடரில் சிறப்பாக விளையாடுவீர்களா? என்று கேட்கப்பட்ட போது ரோகித் சர்மா கோவமடைந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் அது குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித்தை புரிந்து கொள்ள முடிகிறது

இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “பத்திரிகையாளர் கேட்டது என்ன மாதிரியான கேள்வி என்பது எனக்கு புரியவில்லை. அந்த வடிவம் வேறு இந்த வடிவம் வேறு. கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்கு எப்போதுமே ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும். என் வாழ்வில் நான் இதை நிறைய சந்தித்துள்ளேன். எனக்கு இது புதிதல்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியும் எனக்கு புதியது தான். நான் எப்போதும் சவாலை எதிர் நோக்குவேன்.

இதையும் படிங்க:148 வருடம்.. 55 ஓவர்.. ஸ்மித் சாதனை சதம்.. கேரி அதிரடி சதம்.. சிக்கிய இலங்கை அணி.. ஆஸி 2வது டெஸ்டில் முன்னிலை

இதை ரோகித் சர்மாவின் மனநிலையில் இருந்து பார்த்தால் இது அவருக்கு வெறுப்பாக இருக்கிறது, அவர் நன்றாக செயல்பட விரும்புகிறார். அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள், அவர் எப்போது நன்றாக செயல்படுகிறாரோ அப்போதுதான் இந்தக் கேள்விகள் நிறுத்தப்படும் என்று நினைக்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக ரோஹித் என்ன நினைக்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது எளிதானது கிடையாது இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு சதம் அடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -