சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசை -சுப்மான் கில் சிங்க பாய்ச்சல்

0
62

சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி இளம் வீரர் சுப்மான் கில் கிடுகிடுவென உயர்ந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியின் புள்ளிகள் அதிகரித்தாலும் தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் இளம் வீரர் சுப்ம்மான் கில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் சிங்கப்பாய்ச்சலாக 45 இடங்கள் முன்னேறி தற்போது 38 வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

ஜிம்பாபே அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய கில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 98 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்மான் கில், இது தமக்கு ஸ்பெஷலான சதம் என்று தெரிவித்துள்ளார். பந்தை வீணடிக்காமல் சிங்கிள் ஆடி ரன் சேர்க்க வேண்டும் என்று முடிவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள சுப்மான் கில் பில்டர்களுக்கு நடுவே இருக்கும் இடத்தை பயன்படுத்தி அதில் பவுண்டரிகளை விளாசியதாக குறிப்பிட்டார்.97 பந்துகளில் 13 ரன்கள் விலாசிய சுப்மான் கில் 15 பவுண்டர்களையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார்.

ஜிம்பாவே தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த விராட் கோலி தொடர்ந்து ஐந்தாவது இடத்திலும் ரோகித் சர்மா ஆறாவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.கில்லுக்கு ஜோடியாக களம் இறங்கிய ஷிகர் தவான் தொடர்ந்து இரண்டு அரை சதம் அடித்தும் ஒரு இடம் சரிந்து பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் 891 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டுசன் 789 புள்ளிகள் உடன் இருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா, பும்ரா மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோரை பிண்ணுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

- Advertisement -