“என் ப்ளானே அந்த இங்கிலாந்து பிளேயரை விடக்கூடாதுனுதான்.. அவர் பேசட்டும்” – சுப்மன் கில் பேட்டி

0
525
Gill

மார்ச் 8. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் பெரிய அளவில் நிலவுகிறது. தற்போது போட்டி சூழ்நிலையில் இங்கிலாந்து அணி வெல்ல ஒரு சதவீத வாய்ப்புகள்தான் இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சின் காரணமாகவும், சரியாக விளையாடாததின் காரணமாகவும் 218 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டார்கள்.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அதை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறி விட்டார்கள். அதே சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கச்சிதமாக சூழ்நிலையை பயன்படுத்தி அபாரமாக ரன்கள் குவித்து பெரிய முன்னிலை பெற்று இருக்கிறார்கள். தற்பொழுது இந்திய அணி 473 ரன்கள் எட்டு விக்கெட் இழப்புக்கு எடுத்து 255 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இன்று இரண்டாம் நாள் போட்டியின் துவக்கத்தில் ரோஹித் சர்மா ஒருபுறம் மெதுவாக நிற்க, சுப்மன் கில் அதிவேகமாக அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அவரது அதிரடியின் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மெல்ல மெல்ல அழுத்தத்தில் விழுந்தார்கள்.

குறிப்பாக சுப்மன் கில் ஆண்டர்சன் பந்துவீச்சு வரும்பொழுது எல்லாம் குறி வைத்து அடித்தார். ஆரம்பம் முதல் அவரது பந்துவீச்சில் அதிரடி காட்டி, இறுதியிலும் அதிரடி காட்டி அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமும் இழந்தார். மேலும் அவர் ஆட்டம் எடுப்பதற்கு முன்பு ஜேம்ஸ் ஆண்டர்சன் சிரித்தபடி அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் மொத்தம் இரண்டு சதங்கள் எடுத்து 400 ரன்கள் கடந்து, சுப்மன் கில் தன் மீதான பேட்டி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய கில் கூறும் பொழுது “என் அப்பா நான் விளையாடும் சர்வதேச போட்டியை பார்க்க வந்திருப்பது இந்தத் தொடரில்தான் முதல் முறை. நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது அவருடைய தொலைநோக்கான கனவு. நான் இன்று நல்ல முறையில் விளையாடியதில் அவர் பெருமைப்படுவார் என்று நினைக்கிறேன்.

இன்று காலையில் பந்து பெரிய அளவில் விளையாடுவதற்கு சிரமமாக இல்லை என்று உள்ளுணர்வில் நினைத்தேன். மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனை அழுத்தத்தில் வைக்க வேண்டும் என்பது என்னுடைய திட்டமாக இருந்தது. அதன் காரணமாகவே நான் இறங்கி சென்று அவரது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினேன்.

இதையும் படிங்க : “வாங்க நம்ம நாட்டுக்கு கிளம்பலாம்.. இந்திய அணி மொத்தமா சீல் பண்ணிடுச்சு” – அலைஸ்டர் குக் பேச்சு

ஒவ்வொரு முறை நான் பேட்டிங் செய்ய செல்லும் பொழுதும் நான் நல்ல முறையில் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு கிடைக்கும் தொடக்கங்களை நான் பெரிய அளவில் மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். எனக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே உரையாடல் இருந்தது. இந்த மாதிரியான நல்ல உரையாடல் எங்களுக்குள் இருக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.