சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆன இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மான் கில் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் 26 வயதான இளம் வீரர் சுப்மான் கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் டி20 அணியின் துணை கேப்டன் ஆகவும் திகழ்ந்து வருகிறார். ஒரு நாள் தொடரிலும் ரோஹித் சர்மாவிற்கு பிறகு முழு நேர கேப்டனாகவும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் தற்போது தனது பேட்டிங் பங்களிப்பை பெரும் அளவில் மேம்படுத்திக் கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கில் அளித்த பேட்டியில் விராட் கோலியை வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரின் நடுவே, துணை கேப்டன் அளித்த ஒரு பேட்டியில் விராட் கோலி கிரிக்கெட்டை அணுகும் விதம் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார். நாம் எவ்வளவு கிரிக்கெட் நுட்பங்களை கற்றுக்கொண்டாலும், விராட் கோலி கிரிக்கெட்டுக்காக காட்டும் ஈடுபாடு அர்ப்பணிப்பு, ஆகியவை அதிக அளவில் இருக்கும் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “விராட் பாயை நான் மிகவும் ரசித்தேன். அவர் விளையாட்டை விளையாடிய விதம் கிரிக்கெட்டை சுமந்த தீவிர ஆர்வம், கிரிக்கெட் மீது அவருக்கு இருந்த உண்மையான பசி ஆகியவை என்னை வியக்க வைத்தது. நீங்கள் அனைத்து திறன்களையும் நுட்பங்களையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பசியும் ஆர்வமும் உங்களிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விராட் கோலிக்கு அந்த விஷயம் தான் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க:கில் கேப்டனா இருக்கும் குஜராத் அணியில் கூட.. இதை செஞ்சு நாங்க பாக்கவே இல்ல – கோச் பார்த்தீவ் பட்டேல் ஆச்சரியம்
அவரிடம் இருந்த கிரிக்கெட் பசி தான் என்னை அவரிடம் உத்வேகம் அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது” என்று கில் பேசி இருக்கிறார். விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி வருகிறார் 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியில் தொடர்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது