கில் கேப்டனா இருக்கும் குஜராத் அணியில் கூட.. இதை செஞ்சு நாங்க பாக்கவே இல்ல – கோச் பார்த்தீவ் பட்டேல் ஆச்சரியம்

0
69

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி எளிமையாக யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான் கில் விளையாடிய விதம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் பார்த்து பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுனைடெட் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 57 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் மற்றும் சிவம் தூபே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

இதில் அபிஷேக் ஷர்மாவுடன் களமிறங்கிய தொடக்க வீரர் துணை கேப்டன் சுப்மான்கில் 9 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடக்கம் முதலே அடித்து ஆடி ஆக்ரோஷமான ஆட்டத்தை துணை கேப்டன் வெளிப்படுத்திய நிலையில், குஜராத் அணியில் அவரிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று குஜராத் ஐட்டம்ஸ் அணியின் பயிற்சியாளர் பார்தீவ் பட்டேல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “கில் முதலில் முதல் பந்தை டிரைவ் செய்தார். அதற்கு அடுத்த பந்தில் கிரீசை விட்டு வெளியே வந்து பவுண்டரி அடித்தார். மேலும் அதேபோல ஒரு சிக்ஸர் அடித்தார். அவர் குஜராத் அணிக்காக விளையாடும்போது இந்த ஒரு அணுகுமுறையை நாம் பார்த்ததில்லை. அவர் குஜராத் அணியில் ஆரம்பத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறார். ஆனால் இங்கே இந்திய அணி எட்டு பேட்ஸ்மேன்களோடு விளையாடியது.

இதையும் படிங்க:பாசாங்கு செய்பவரா சூரியகுமார் மாற போறார்.. யுஏஇ கிட்ட செஞ்சதை பாகிஸ்தானிடம் செய்ய முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

மேலும் இப்போது இருக்கும் இந்திய அணியின் அணுகுமுறை என்பது தாக்குதல் கிரிக்கெட் விளையாடுவதாகும்” என்று பேசி இருக்கிறார். ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி, எட்டாவது இடம் வரை பேட்டிங் நீளத்தை அதிகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -