கொல்கத்தா ஆடுகளம் கம்பீர் கில் அதிருப்தி.. உள்ளே வந்த கங்குலி.. பிட்ச் அமைப்பாளருடன் நடந்தது என்ன?

0
114
Gill

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் அமைக்கப்பட்ட விதத்தில் இந்திய கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

கேப்டன் கில் அதிருப்தி

ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை முடித்தவுடன் வேகமாக இந்திய அணி இந்தியா வந்து சேர்ந்தது. இதில் உடனடியாக கேப்டன் கில் கொல்கத்தா வந்து ஆடுகளத்தை பார்வையிட்டார். பிறகு அவர் ஆடுகளத் தயாரிப்பாளர் சுஜன் முகர்ஜியை அழைத்து 15 நிமிட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் கேப்டன் கில்லுக்கு ஆடுகளம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆடுகளத்திற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் விடாமல் மிகவும் வறண்டும் சில இடங்களில் புல் திட்டுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கேப்டன் கில்லுக்கு இந்த ஆடுகளத்தின் மீது விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தெளிவுப்படுத்திய கங்குலி

பிறகு உடனடியாக மைதானத்திற்கு வந்த கங்குலி ஆடுகளத் தயாரிப்பாளர் சுஜன் முகர்ஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு இந்திய அணி நிர்வாகம் தங்களுக்கு சுழல் பந்து வீழ்ச்சிக்கு தேவையான ஆடுகளம் வேண்டும் என கேட்கவில்லை என்பதையும் கங்குலி தெளிவுபடுத்தினார். பின்னர் ஒரு வழியாக சமாதானமாக அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

இதையும் படிங்க : விராட் ரோகித்தை கம்பீர் கொண்டாட தேவையில்ல.. மக்கள் கொண்டாடிட்டாங்க – பதிலடி கொடுத்த முகமது கைஃப்

சமீபத்தில் இங்கு ரஞ்சி டிராபி போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் முதலில் வேகப் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அடுத்து ரிவர்ஸ் ஸ்விங் எடுக்க ஆரம்பித்ததும் முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டார்கள். தற்போது இந்திய அணியும் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட விரும்பவில்லை. எனவே இந்த ஆடுகளம் தண்ணீர் விடப்படாமல் அதிகம் வறண்டு, சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது போல இருந்தது, இந்திய கேப்டனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -