விராட் தவான் மெகா சாதனையை உடைத்த கில்.. ஜோ ரூட் சாதனை சமன்.. அகமதாபாத்தில் அசத்தல் பேட்டிங்

0
607
Gill

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்து அபாரமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜடேஜா, ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், அர்ஸ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் விளையாடும் வாய்ப்பு பெற்றார்கள்.

- Advertisement -

ஃபார்முக்கு வந்த டாப் ஆர்டர்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. கடந்த போட்டியில் அபார சதம் அடித்திருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்து 55 பந்தில் 52 ரன் எடுத்தார். கில் உடன் இணைந்து 107 பந்தில் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இந்த நிலையில் அடுத்து கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடியில் அபாரமாக செயல்பட்ட கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 7வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 102 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 112 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

மெகா சாதனை முறியடிப்பு

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 64 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அடுத்து கேஎல்.ராகுல் 29 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தரப்பில் ஆதில் ரஷீத் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.. ரூ.4.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார் வீரர் விலகல்

இன்றைய போட்டி கில்லுக்கு 50ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்தது. மேலும் முதல் 50 ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷிகர் தவான் தன்னுடைய முதல் 50 ஒருநாள் போட்டியில் ஆறு சதங்களும், விராட் கோலி தன்னுடைய முதல் 50 ஒருநாள் போட்டியில் 5 சதங்களும் எடுத்திருந்தார்கள். மேலும் 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் 13 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது கில் இதை சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -