சச்சின், கோலியை விட நீங்க பெரிய வீரரா? சுப்மன் கில் மீது ரசிகர்கள் விமர்சனம்.. பேட்டால் வந்த சர்ச்சை

0
214

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுபமன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். கில் தலைமையில் தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கில் ஒரு நாள், டி20 போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் நன்றாக விளையாடி இருக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்கா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சதம் அடித்தால் மட்டுமே கிரிக்கெட் ஜாம்பவான் என்ற உயரத்தை அடைய முடியும். இந்த சூழலில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கே பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

பிஆர் மூலம் பிரபலம் என புகார்:

கில், சமூக வலைத்தளத்தில் போலியாக தம்மை புகழ்ந்து பிரபலமாக இருப்பது போல் ஒரு இமேஜை உருவாக்கிருக்கிறார் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்
இப்படி பி ஆர் வைத்து விளம்பரம் தேடியது மூலம் தான் தற்போது கேப்டனாகவே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த சூழலில் சச்சினை கிரிக்கெட் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இதேபோன்று தோனியை கூல் கேப்டன், என்றும் விராட் கோலியை திங் தி ரன் மிஷின் என்றும் ரசிகர்கள் அழைப்பதுண்டு. இதேபோன்று சுப்மன் கில்லை தி பிரின்ஸ் என்ற வார்த்தைகளால் சிலர் அழைக்கின்றனர்.

- Advertisement -

பேட்டால் வந்த சர்ச்சை:

இந்த தருணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கில் தனது பேட்டில் பிரின்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஓவர் நம்பிக்கைல வராதீங்க இந்திய அணி.. எங்க ஆட்டம் இனிமேல் தான் இருக்கு.. இங்கிலாந்து கோச் சவால்

விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் எம் ஆர் எஃப் பேட்டையை பயன்படுத்தி இருந்தபோது அதில் கம்பெனி நிறுவன பெயரைத் தவிர வேறு எந்த ஊரு பெயரையும் சேர்த்துக் கொண்டதில்லை. ஆனால் எம்ஆர்எப் நிறுவனத்திற்கு கீழ் தி பிரின்ஸ் என்று கில் போட்டு இருக்கிறார். இதுதான் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பலரும் நீங்கள் என்ன கோலி, சச்சினை விட பெரிய ஆளா? முதலில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வையுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -