ஓவர் நம்பிக்கைல வராதீங்க இந்திய அணி.. எங்க ஆட்டம் இனிமேல் தான் இருக்கு.. இங்கிலாந்து கோச் சவால்

0
596

இந்திய கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த முறை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி களம் இறங்குகிறது.

இந்த சூழ்நிலையில் இளம் இந்திய அணி குறித்தும் தங்கள் இங்கிலாந்து அணி குறித்தும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. அதற்குப் பின்னர் இந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது இந்திய அணிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல் இது இங்கிலாந்து அணிக்கு சற்று சாதகமான சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் இளம் இந்திய அணி அதிக நம்பிக்கையோடு களம் இறங்கும் எனவும், இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் எந்த திசையில் பயணப்படுத்த நினைப்பதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து கோச் பேட்டி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” வீரர்கள் புத்துணர்வு பெறுவது என்பது மிக முக்கியமான விஷயமாகும். இந்த தொடரின் மூலமாக நாங்கள் டெஸ்ட் தொடரில் எந்த திசையில் செல்ல விரும்புகிறோம் என்பதை தெளிவாக திட்டமிட்டுள்ளோம். ஆர்ச்சர், மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடவில்லை என்றாலும் கிறிஸ் வோக்ஸ், சாம் குக், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டோங் ஆகியோர் அதிவேகப் பந்துவீச்சை வழங்குவதால் எங்களிடம் மாறுபட்ட தாக்குதல் உள்ளது.

இதையும் படிங்க:மனுஷன் எப்படி இதை செய்றார்னு தெரியல.. நானே பிரமித்து போறேன்.. பும்ராவை கண்டு மிரளும் இந்திய பௌலிங் கோச்

எங்களிடம் ஷோயப் பஷீரும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சோதிக்கப்படுவோம் என்று தெரியும். அவர்கள் இங்கு தயாராக வருவார்கள். இந்திய அணி ஒரு சிறந்த கிரிக்கெட் நாடு, அவர்கள் மிக தன்னம்பிக்கையோடு இங்கு வருவார்கள். அவர்களுக்கு எதிரான போட்டியை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என பேசி இருக்கிறார்.

- Advertisement -