சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில் டி20 ஃபார்மெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த சூழ்நிலையில் அந்த இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இடத்தை நிரப்ப இரு இந்திய இளம் வீரர்கள் தயாராக இருக்கின்றனர் என்று முன்னாள் வீரர் சபா கரீம் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தையும் அதே போல விக்கெட்டுகள் விரைவில் இழந்தால் ஒரு இடத்தில் நங்கூரம் போல் நிலைத்து நின்று இந்திய அணியை கரை சேர்ப்பதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த வீரர்கள். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிக வலுப்பெற்று இருக்கக் காரணமே இந்த இரு வீரர்களின் அபாரமான பங்களிப்பு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையோடு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்களின் இடத்தை நிரப்ப சமீபத்தில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்திய இளம் அணி தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதனால் தற்போது இந்திய தேர்வாளர்களுக்கும் இது ஒரு சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது. இளம் வீரர்களை நம்பி ஜிம்பாப்வே தொடருக்கு அனுப்பிய இந்திய அணி நிர்வாகம் அதன் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இளம் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து இருந்தாலும் அதன் பிறகு வலுவான கம்பேக் கொடுத்துள்ளது.
ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோரின் முறியடிக்கப்படாத பார்ட்னர்ஷிப் மேட்ச் வின்னிங் இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளது. வலது மற்றும் இடது கை கூட்டணியை பற்றி நாம் பலமுறை பேசியிருக்கிறோம். தற்போது உங்களுக்கு முன்னால் இரண்டு இடங்கள் காலியாக இருக்கிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இனி டி20 போட்டியில் பார்க்க முடியாது. அதற்கு இந்த இரண்டு வீரர்களும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:யுவராஜ் என்னை பவுலிங்கே போட வேண்டாம்னு சொல்லி.. வேற வேலை ஒன்னு கொடுத்தாரு- இர்பான் பதான் பேட்டி
இந்த இடத்திற்கு வேறு பல போட்டியாளர்களும் இருக்கின்றனர். இருப்பினும் தேர்வாளர்களின் கவனத்தால் இந்த இரண்டு வீரர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த வேலையை சரியாக செய்தனர். எனவே அவர்கள் இனிவரும் போட்டி மற்றும் தொடரை வென்று இதே போல பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






