யுவராஜ் என்னை பவுலிங்கே போட வேண்டாம்னு சொல்லி.. வேற வேலை ஒன்னு கொடுத்தாரு- இர்பான் பதான் பேட்டி

0
317
Irfan

நேற்று யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய முன்னாள் வீரர்களின் இந்தியா சாம்பியன்ஸ் அணி, உலக லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இர்பான் பதான் இது குறித்து பேசி இருக்கிறார்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு பதான் சகோதரர்கள் இருவரும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டிருந்தார்கள். இருவருமே இந்திய அணிக்கு பேட்டிங்கில் தேவையான நேரத்திற்கு ரன்களை அடித்து முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

லீக் சுற்றில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் தேவையான ரண்களை எடுத்து இருவருமே அரை சதம் அடித்து இந்திய அணியை அரையிறுதிக்கு கூட்டி வந்தார்கள். இதில் இர்பான் பதான் இந்த தொடர் தனக்கு எப்படி அமைந்தது? என்றும், கேப்டன் யுவராஜ் சிங் என்ன மாதிரியான வியூகங்களை கொண்டு வந்தார்? என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இன்று அம்பதி ராயுடு விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. மேலும் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. மேலும் என் அண்ணன் யூசுப் பதான் வெற்றிக்கு கடைசியில் அடித்த ரன்களும் மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு பார்ட் டைமாக கிரிக்கெட் விளையாடும் சிறப்பாக இருப்பது மிகவும் கடினமானது.

- Advertisement -

உங்களுக்கே தெரியும் பிஎஸ்எல் மற்றும் பிபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இந்தத் தொடரில் அவர்களது அணிகளில் இடம் பெற்று விளையாடி இருந்தார்கள். இதில் சிலர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை எதிர்த்து போட்டியிட்டு விளையாடுவது கடினமானது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில்.. கேப்டனாக கம்மின்ஸ் ஏன் இல்லை.. பின்னணியில் என்ன நடந்தது? – பிரட் லீ பேச்சு

இந்த நிலையில் வெற்றிக்கு முழு பெருமையும் கேப்டன் யுவராஜ் சிங்குக்கு சேரும். அவர் ஒரு அருமையான அணியை கட்டினார். ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான வேலைகள் என்பது குறித்து மிகவும் புத்திசாலித்தனமாக எல்லோருக்கும் புரிய வைத்தார். என்னிடம் அவர் பந்து வீச வேண்டாம் பேட்டிங்கில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இன்று என்னுடைய கேப்டன் எனக்கு மூன்று ஓவர்கள் பந்து வீச கொடுத்தார்” என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -