வீடியோ: தில்லுக்கு துட்டு கேட்ச்.. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா ஷ்ரேயாஸ் ஐயர் என்ன ஆகிருப்பரோ.. அப்படியொரு கேட்ச்!

0
2857

கெஞ்சம் மிஸ் ஆகிருந்தா அவரே மிஸ் ஆகிருப்பாரு அப்படியொரு கேட்ச் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர். வீடியோ கீழே உள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் அடித்தது. தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல்நாள் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

களத்தில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கினர். இந்திய அணி 46 ரன்கள் இருந்தபோது, கேஎல் ராகுல்(17) லயன் பந்தில் அவுட்டானார்.

அடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா(32), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லயன் சுழலில் ஆட்டம் இழந்தனர். 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி , ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கொரை உயர்த்தினார்.

ஜடேஜா 26 ரன்களுக்கு மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார். முனைப்புடன் விராட் கோலி விளையாடி வந்த விதம் சதம் அடிப்பார் என்கிற எதிர்பார்ப்பை கூடியது. ஆனால் சர்ச்சையான முறையில் எல்பிடபிள்யூ ஆகி 44 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.

- Advertisement -

139/7 என பரிதாபமான நிலையில் இந்திய அணி இருந்தது. அப்போது ஆஸி., அணியை விட 124 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருந்தது. இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இந்திய அணியை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டனர்.

முதல் டெஸ்ட் போலவே இதிலும் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பக்கபலமாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களுக்கு பேட் கமெண்ட்ஸ் பந்தில் அவுட் ஆகினார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது.

கடைசிவரை போராடிய அக்ஸர் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி அணியை விட 1 ரன் பின்தங்கி இருந்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸி., அணிக்கு வார்னர் போட்டியிலிருந்து விலகியதால், கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஓபனிங் செய்தார். ஜடேஜா பந்தில் கவாஜா ஸ்வீப் அடித்தபோது, அருகில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் திடுக்கென கேட்ச் எடுத்தார்.

இந்த கேட்சை மிஸ் செய்திருந்தால், பந்து ஷ்ரேயாஸ் கழுத்தை பதம் பார்த்திருக்கும். அந்த அளவிற்க்கு டேஞ்சரான கேட்சை எடுத்து ஆச்சர்யப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

ஷ்ரேயாஸ் எடுத்த கேட்ச் வீடியோ:

2ம் நாள் முடிவில் ஆஸி., அணி 61 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது. 62 ரன்கள் முன்னிலையிலும் இருந்தது. டிராவிஸ் ஹெட் 39 ரன்களுடன், லபுஜானே 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.