ஸ்ரேயாஸ் ஐயரை சிறப்பாக கவனித்த பிசிசிஐ.. முடிவுக்கு வந்த கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை – என்ன நடக்கிறது?

0
38
Karun

இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவார் என செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கருண் நாயர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ஏமாற்றம் தரவே இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவரை கைவிட்டு இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்

ஆஸ்திரேலிய ஏ அணி இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்தியா வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் இந்த பொறுப்பை அபிமன்யு ஈஸ்வரன் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் அகாதர் தலைமையிலான தேர்வுக் குழு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் அதிரடியாக கருண் நாயரை தேர்வு செய்யவில்லை. இதன் காரணமாக அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய பிறகு உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தற்போது இந்திய அணியில் மூன்றாவது மற்றும் ஆறாவது இடம் உறுதி செய்யப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2027 ஒருநாள் உலக கோப்பை.. விராட் ரோஹித் இத செய்யலனா தயவு செஞ்சு ஓய்வு பெறுவது நல்லது – முன்னாள் தெ. ஆ வீரர்

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் ஆறாவது இடத்திற்கு தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. இதன்மூலம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குப் பிறகு மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -