2027 ஒருநாள் உலக கோப்பை.. விராட் ரோஹித் இத செய்யலனா தயவு செஞ்சு ஓய்வு பெறுவது நல்லது – முன்னாள் தெ. ஆ வீரர்

0
39

2027 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான வீரர்கள் தேர்வு மற்றும் அணி கட்டமைப்பு என அனைத்தையும் கிரிக்கெட் அணிகள் கண்காணித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாரில் கல்லினன் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்ப்பாராத விதமாக தோல்வியடைந்து கோப்பையை நழுவ விட்டது. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில் அதிலிருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த மே மாதத்தில் விராட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் தொடரிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்கள்.

இனி இவர்கள் இருவரும் ஒரு நாள் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் உலகக் கோப்பைக்கு முன்பாக குறைந்து அளவு ஒரு நாள் போட்டிகளே இருக்கின்றன. எனவே இது ஒரு நாள் உலக கோப்பைக்கு தயார் ஆவதற்கு போதுமான வகையில் இருக்காது எனவும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் போதுமான அளவு போட்டிகளில் விளையாடி உடல் அளவிலும் மனதளவிலும் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார். இல்லையேல் இவர்கள் இருவரும் ஓய்வு பெறுவது நல்லது எனவும் சில வெளிப்படையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது ” சரி திறமை மற்றும் அனுபவ கண்ணோட்டத்தில் இவர்கள் இருவரும் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருக்க வேண்டும். நான் தேர்வுக் குழுவின் பயிற்சியாளராகவோ அல்லது ஒருங்கிணைப்பாளராகவோ இருந்தால் இவர்கள் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புவேன். இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு சில ஆட்டங்களில் விளையாடலாம் அல்லது சில ஆட்டங்களில் ஒதுக்கி வைத்து விடலாம்.

இதையும் படிங்க:விராட் கோலி கிடையாது.. இந்த 42 வயது வீரருக்கு பந்து வீசத்தான் ரொம்ப கடினமா இருந்தது – ஷாகின் அப்ரிடி பேச்சு

ஆனால் அப்படி செய்வது எந்த அளவிலும் கை கொடுக்காது. அவர்கள் எப்போதும் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்கள் இருவரும் ஒரு நாள் உலக கோப்பைக்கு முன்பாக போதுமான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் அதிக அளவுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் வாரியம் அதற்கு மாற்று ஏற்பாட்டினை பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -