ஸ்ரேயாஸ் ஐயர்,சூரியகுமார் வெளியே.. தவான் உள்ளே – சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்ந்தெடுத்த 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணி

0
432

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன .

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வைத்து நடைபெறும் உலகக்கோப்பை என்பதாலும் இந்திய அணி உலக கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் இந்த முறை நிச்சயமாக இந்தியா அணி உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வருகிறது

- Advertisement -

இதற்காக பலமான அணியை தேர்வு செய்யும் பொருட்டு இந்த வருடம் ஜனவரி மாதமே உலகக்கோப்பையில் விளையாட தகுதி உடைய 30 வீரர்களைக் கொண்ட பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இந்த 30 வீரர்களில் இருந்துதான் உலகக்கோப்பையை விளையாட போகும் 15 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இந்திய தீர்வு குழு அறிவித்திருந்தது .

இந்நிலையில் உலக கோப்பை போட்டிகளுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வருவதால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களுடைய உத்தேச அணியை தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தன்னுடைய அணியை தேர்வு செய்து இருந்தார் . தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இவர் தேர்வு செய்திருக்கும் இந்திய அணியில் பல ஆச்சரியமான வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது. சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்திருக்கும் இந்திய அணியில் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் தேர்வு செய்திருக்கும் அணியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளனர். மாற்று துவக்க வீரராக தவான் இடம் பெற்று இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி,இஷான் கிஷான்,சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இவரது அணியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரை வேகப்பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்து இருக்கிறார். மேலும் இவரது அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யூஷேந்திர சகால் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். உலகக் கோப்பை காண அணியை அறிவிப்பதற்கு கடைசி தேதி ஆகஸ்ட் 29 ஆகும். அதற்குள் பிசிசிஐ சிறந்த ஒரு அணியை தேர்ந்தெடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.