இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு பிரம்மாண்ட சாதனைகளுடன் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டரி செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் சைபர்ட் 17 பந்துகளில் 24 ரன்கள், பின் ஆலன் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் ஆட்டம் இழக்காமல் பிலிப்ஸ் 40 பந்துகளில் 82 ரன்கள், பேவான் ஜேக்கப் 16 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப், அக்ஷர் பட்டேல் மற்றும் மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 12 பந்தில் 29 ரன்கள், சஞ்சு சாம்சன் 33 பந்தில் 67 ரன்கள் எடுத்து அபாரமான தொடக்கத்தை கொடுத்தார்கள் இந்திய அணி பவர் பிளேவில் 94 ரன்கள் குவித்தது. வெளி மண்ணில் இதுவே இந்தியா அணிக்கு பவர் பிளேவில் அதிகபட்ச ரன் ஆகும்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 28 பந்தில் 42 ரன்கள், அக்சர் படேல் 14 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். இறுதிக்கட்டத்தில் நமன் ஆட்டம் இழக்காமல் 15 பந்தில் 42 ரன்கள் எடுத்து இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் இந்திய அணி சேஸ் செய்த அதிகபட்ச இலக்காக இது அமைந்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.