தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கேப்டன் பொறுப்பும் திரும்பி வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக தொடர்கிறார்.
களத்திற்கு திரும்பும் ஸ்ரேயாஸ்
தற்போது இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து விட்டாலும். இந்தத் தொடரில் மும்பை அணிக்காக அவர் இதுவரையில் களம் இறங்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 11ம் தேதி துவங்க இருக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக, மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் விஜய் ஹசாரே ட்ராபில் விளையாட அவர் சமாதித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக மும்பை அணிக்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு அணிகள் மகிழ்ச்சி
தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து திரும்பி வந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் மிகப்பெரிய நம்பிக்கையை தரக்கூடிய வீரராக அவர் இருந்து வருகிறார். எனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அவர் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். மேலும் கில் விளையாட முடியாமல் போனால் அவர் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிதீஷ் குமாரை எதிர் டீம் புரட்டி எடுத்துடும்.. நீங்க நியாயமா இந்த பையனை செலக்ட் பண்ணனும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
இத்துடன் ஐபிஎல் தொடர் வேகமாக நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மிகப்பெரிய காயத்தில் இருந்து அவர் குணமடைந்து வந்திருப்பதால், நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவர் கேப்டன் பொறுப்பில் தொடர்வார். இதன் காரணமாக அந்த அணியின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.






