தற்போது இந்திய ஒரு நாள் அணியில் நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்திருப்பது தவறான தேர்வு என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வில்லை. அவருடைய இடத்திற்கு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்படவில்லை.
அடித்து நொறுக்கி விடுவார்கள்
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நிதீஷ் குமார் ரெட்டி என்ன செய்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் எப்படி ஒரு ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார்? எதிர் அணிகள் அவருடைய பந்துவீச்சை எல்லா பக்கத்திலும் அடித்து நொறுக்குவார்கள். எனவே அவருக்கு பவுலிங் வாய்ப்பு தரப்படாது. இப்படிப்பட்டவர் எப்படி ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக பார்க்கப்படுகிறார்?!”
“நிதீஷ் குமாரை ஒரு முழுமையான பவுலராக உங்களால் அணிக்குள் வைத்துக் கொள்ள முடியுமா? நீங்கள் அவருக்கு எப்போதாவது மூன்று அல்லது நான்கு ஓவர்கள் தொடர்ந்து கொடுத்து இருக்கிறீர்களா? அவர் ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீச வேண்டி இருந்தால் அதை எப்படி செய்வார்? அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை”
அவர் என்ன சாதித்து இருக்கிறார்?
“அவரை எப்படி ஆல் ரவுண்டராக அணிக்குள் தள்ளுகிறார்கள் என்று புரியவில்லை? உள்நாட்டு கிரிக்கெட்டில் அவருடைய ரெக்கார்டு அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அப்படி என்ன செய்திருக்கிறார் என்று புரியவில்லை”
இதையும் படிங்க : WTC ஜெயிச்சு காட்டுறேன்.. எனக்கு இதை பண்ணி கொடுங்க.. பிசிசிஐக்கு கில் கோரிக்கை – வெளியான தகவல்கள்
“இவருடைய இடத்திற்கு அக்சர் படேலை தேர்வு செய்திருக்கலாம். அவர் ஒரு ஆல் ரவுண்டர். மேலும் இந்திய டி20 அணிக்கு துணை கேப்டனாக இருக்கிறார். அவர் திறமையானவராகவும் சீராக செயல் திறனை வெளிப்படுத்தக் கூடியவராகவும் இருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் அவரை நீக்கி விட்டார்கள் என்று புரியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.






