சாய் சுதர்சன் கோலி ஸ்டைல் சதம்.. ஒரே போட்டியில் 3 டீம் ப்ளே ஆப் போனது.. குஜராத்தின் செம சம்பவம்

0
1865
Sudharsan

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் காரணமாக ஒரு போட்டியின் முடிவால் 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கின்றன.

இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் களம் இறங்கியது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

கேஎல்.ராகுல் அசத்தல் சதம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணிக்கு பேட்டிங் யூனிட்டில் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் தனது ஐந்தாவது ஐபிஎல் சதத்தை அடித்தார். இறுதிவரை களத்தில் என்ற அவர் 65 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 112ன்கள் குவித்தார். டெல்லி அணி20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் அற்புதமான துவக்கத்தை கொடுத்து ஆட்டத்தையும் முடித்து வைத்தார்கள். இறுதிவரை களத்தில் நின்ற இவர்களில் மிகச் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் சதம் அடித்து 61 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் எடுத்த. இவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் பில் 53 பந்துகளில் மூன்று பவுண்டர்கள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 93 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

- Advertisement -

பிளே ஆப் சென்ற மூன்று அணிகள்

இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று 12 போட்டியில் 18 புள்ளிகள் பெற்றது. மேலும் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் 12 போட்டியில் 17 புள்ளிகள் எடுத்து இருக்கின்றன. தற்போது குஜராத் அணி வெற்றியால் இந்த மூன்று அணிகளுமே ஒரே நேரத்தில் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியிருக்கின்றன.

இதையும் படிங்க : 65 பந்து பிரில்லியன்ஸ்.. ஒரே போட்டியில் கேஎல் ராகுல் 4 மெகா ரெக்கார்டுகள்.. வேற லெவல் இன்னிங்ஸ்

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. டெல்லி அணி 13 புள்ளிகள் எடுத்து இருக்கிறது அந்த அணிக்கும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. மேலும் இந்த இரண்டு அணிகளும் நேரடியாக ஒரு போட்டியில் மோதிக் கொள்வதால், ஏதாவது ஒரு அணி வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்து மும்பை அணி 16 புள்ளிகள் எடுத்து இருக்க, லக்னோ அணி மீதமிருக்கும் மூன்று போட்டியிலும் என்று 16 புள்ளிகள் எடுத்து ரன் ரேட்டில் மும்பையை விட மேலே இருந்தால் அந்த அணியும் ப்ளே ஆப் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -