ஸ்ரேயாஸ் இஷானை சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது பிசிசிஐ.. 30 வீரர்களுக்கு இடம்.. முழு தகவல்கள்

0
748
Ishan

2023-24 ஆண்டுக்கான சம்பள பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது. இந்த சம்பள பட்டியலில் பி பிரிவில் ஏற்கனவே இடம் பெற்று இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சி பிரிவில் இடம் பெற்று இருந்த இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிசிசிஐ இது குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் சம்பளப் பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று நேரடியாகவே குறிப்பிட்டு இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ ஏ+, ஏ, பி, சி என மொத்தம் நான்கு பிரிவுகளில் வீரர்களைப் பிரித்து சம்பளத்தை நிர்ணயித்து இருக்கிறது. இந்த நான்கு பிரிவுகளுக்கும் 7, 5, 3, 1கோடி என சம்பளம் பிரித்து வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதல் பிரிவான 7கோடி சம்பளம் பெறும் ஏ+ கிரேடில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்

5கோடி சம்பளம் பெறும் ஏ கிரேடு பிரிவில் ஆர் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா என ஆறு வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

3கோடி சம்பளம் பெறும் பி கிரேடு பிரிவில் சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ஐந்து வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

1 கோடி சம்பளம் பெறும் சி கிரேடு பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார் என மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

கடைசி பிரிவான சி பிரிவில் இடம்பெறுவதற்கு ஒரு வீரர் 3 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகள் விளையாடினால் தாமாகவே இந்த பிரிவில் இடம் பெற்று விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “14 வயசிலேயே பெரிய ரன் அடிப்பேன்.. வாய்ப்பு வேணும்”.. உலகசாதனை சிஎஸ்கே துஷார் தேஷ் பாண்டே பேட்டி

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு வந்தது தற்பொழுது நிஜமாகி இருக்கிறது. பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தற்பொழுது மிகவும் கண்டிப்புடன் நடக்க ஆரம்பித்து இருக்கிறது.