“நான் சரியா விளையாடலனு திட்டுனாங்க.. கோவமா இருந்தேன்.. ஆனா” ஸ்ரேயாஸ் மறைமுகமாக – யுவராஜுக்கு பதிலடி!

0
1607
Shreyas

உலகக்கோப்பை தொடர்களில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் வரும் ஸ்ரேயாஸ் ஐயர் 500 ரன்கள் கடந்து, உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் பெற்ற இந்திய மிடில் ஆர்டர் என்கின்ற சாதனையோடு விளையாடுகிறார்.

- Advertisement -

மேலும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்களும், தொடர்ந்து நான்கு முறை 50க்கும் மேற்பட்ட ரன்களையும் பெற்ற முதல் ஒருவராக இருக்கிறார் மிடில் ஆர்டரில் இருக்கிறார்.

இவருக்கு நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் நான்கு ஆட்டங்கள் நல்ல அளவில் செல்லவில்லை. அப்பொழுது இவர் மீது விமர்சனங்கள் இருந்தன.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இவரை நான்காவது இடத்தில் களம் இறக்கக்கூடாது என்று பேசி இருந்தார். கே எல் ராகுலுக்கு அந்த இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின் பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது ” உலகக்கோப்பையில் தொடக்கத்தில் என்னிடம் சில நல்ல ஆட்டங்கள் இல்லை. ஆனால் கேப்டன் ரோஹித் பாய் மற்றும் அணி நிர்வாகம் வெளியில் வரும் பேச்சுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி, எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து தைரியமாக விளையாடச் சொன்னார்கள்.

ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா இந்த தொடர் முழுக்க எந்தவித பயமும் இன்றி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர்தான் பேட்டிங்கில் எங்களுக்கான டெம்ப்ளேட்டை உருவாக்கி இருக்கிறார்.

விராட் கோலி பாய் உடன் பேட்டிங் செய்தால் எப்பொழுதும் ஸ்கோர் போர்டு டிக் செய்து கொண்டே இருக்கும். ஒரு விக்கெட்டுக்கு எத்தனை ரன்கள் தேவை என்றும், எது சரியான டோட்டல் என்றும் அவருக்கு எல்லாமே தெரியும். அவர் எப்பொழுதும் எனக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார். எனவே அவருடன் பேட்டிங் செய்வது எப்பொழுதும் அற்புதமான உணர்வு.

நான் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டம் இழக்கவில்லை. மேலும் எனக்கு இரண்டு ஆட்டங்கள் மட்டுமே மோசமாக இருந்தது. மக்கள் என் குறித்து கேள்வி கேட்டார்கள் விமர்சித்தார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. ரன்கள் எடுப்பதற்கான எனது வாய்ப்பு வரும்வரை நான் காத்திருந்தேன்!” என்று கூறியிருக்கிறார்!